Thursday, June 11, 2009

சுமை கால் பணம், கூலி முக்கால் பணம்

சுமை கால் பணம், கூலி முக்கால் பணம் என்ற பழமொழியை நீங்கள் எல்லோரும் கேள்விப் பட்டிறுப்பீர்கள். அதே நிலைமைதான் என் நண்பருக்கு ஏற்பட்டுள்ளது. என் நண்பர் வட மாநிலம் ஒன்றில் வங்கிப் பணியில் இருந்து தமிழகத்திற்கு மாறுதல் ஆகி வந்துள்ளார். அவர் அங்கு ஸ்ப்லென்டர்+ பைக் வைத்திருந்தார். வாங்கி ஒரு வருடம்தான் ஆகிறது. வரும்போது அந்த பைக்கையும் எடுத்து வந்து விட்டார். வண்டியை எடுத்து வரும் போது அந்த மாநில RTO அலுவலகத்தில் இருந்து NOC(No Objection Certificate) வாங்கி வந்து விட்டார்.

இங்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் அந்த பைக்கை ரெஜிஸ்தெர் செய்ய வேண்டும். இங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. வண்டி வாங்கி ஒன்றரை வருடத்திற்குள் வேறு மாநிலத்திலிருந்து இங்கு வந்து ரெஜிஸ்தெர் செய்ய வேண்டும் எனில் கமெர்சியல் டேக்ஸ் அலுவலகத்தில் வண்டியின் இன்வாயிஸ் மதிப்பில் 12.5% மற்றும் R.T.O. அலுவலகத்தில் 8% மற்றும் இன்ன பிற செலவுகளும் இருப்பதாக அறிய நேர்ந்தது. அதுவே வண்டி வாங்கி ஒன்றரை வருடத்திற்கு பிறகு
ரெஜிஸ்தெர் செய்ய வேண்டும் எனில் கமெர்சியல் டேக்ஸ் அலுவலகத்தில் 12.5 சதவீதம் செலுத்தத் தேவை இல்லை. R.T.O. அலுவலகத்தில் மட்டும் 8% மற்றும் இன்ன பிற செலவுகள் செய்தால் போதுமானது. இந்த இன்ன பிற செலவுகள் என்பது 200 ருபாய் அலுவலகத்திற்கும் மற்றும் அவரவர் திறமைக்கு ஏற்ப செய்யும் செலவுகள் ஆகும்.

என் நண்பர் வண்டி வாங்கி ஒரு வருடம்தான் ஆகிறது என்பதால் கிட்டத்தட்ட 8-10 ஆயிரம் ருபாய் செலவு ஆகும். இதற்க்கு வண்டியை அங்கேயே விற்று விட்டு வந்திருக்கலாம் என இப்போது எண்ணுகிறார் . இப்போது என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கும் வர முடியாமல் குழப்பமாக இருக்கிறார்.

எனவே, நண்பர்களே! வேறு மாநிலத்தில் இருந்து வண்டியை தமிழ்நாட்டிற்க்கு எடுத்து வரும் முன்பு, நன்கு யோசித்து பின் இங்கு எடுத்து வாருங்கள்! என் நண்பரைப் போல் அவசரப் பட்டு எடுத்து வந்துவிட்டு சிரமப்பட வேண்டாம்.

4 comments:

கலையரசன் said...

தகவலுக்கு நன்றி பாஸ்!!
எம்மாம் பாசமா இருங்கீங்க எங்க மேல..

டவுசர் பாண்டி said...

இன்னாது, ஒ தோஸ்துக் கிட்டயேவா,
இந்த பேமானி பசங்கோ,
மாலு கேட்டாங்கோ ?
நீ நம்ப டவுசரு ஆளு
இன்னு ஒரு வார்த்த சொல்ல கூடாது ?
சொம்மா !! நின்ன எடத்துலேயே
ஒன்னுக்கு போய் இருப்பாங்களே !!

Mohan said...

//கலையரசன் said...
தகவலுக்கு நன்றி பாஸ்!!
எம்மாம் பாசமா இருங்கீங்க எங்க மேல..
//
வாங்க கலையரசன்! நண்பர்கள் மேல் நம்மைவிட வேறு யார் இவ்வளவு பாசம் வைக்க முடியும் சொல்லுங்கள்!

Mohan said...

வாங்க டவுசர் பாண்டி!
உங்க பேர சொல்லிட்டாப் போச்சி! நீங்க இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை?