Monday, December 13, 2010

எஸ்.எம்.எஸ் கலாட்டா – 13-12-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.


1) 4 விதிகள் புலியைப் பிடிக்க....
  a) நியூட்டன் விதி:-
        முதலில் புலி உங்களை பிடிக்கட்டும். பின் அதை நீங்கள் எளிதில் பிடித்து விடலாம்.
 b) ஐன்ஷ்டீன்  விதி:-
      புலி டயர்ட் ஆகும் வரை அதை துரத்தி, அது டயர்ட் ஆன பிறகு அதை பிடித்து விடவும்
 c) வீரப்பன் விதி:-
     முதலில்  புலியின் மனைவியை கடத்திவிடவும். பின் புலியை சரண்டர் ஆக சொல்லி எச்சரிக்கவும்.
 d) இந்தியன் போலீஸ் விதி:-
      ஒரு பூனையை பிடித்து, அது தன்னை புலி என்று ஒத்துக் கொள்ளும் வரை அடித்து நொறுக்கவும்.

2) அறிவாளிக்கு ஒரு கேள்வி!
?
?
?
?
?
?
?
?
?
?
?
அதான் அறிவாளிக்குன்னு சொன்னோம்ல..
அப்புறம் என்ன லொட்டு லொட்டுன்னு அமிக்கிகிட்டு...
?
?
?
?
மறுபடியும் பார்ரா!...

3) ஒரு நாள் ஒரு குட்டி எலி பெரிய பூனைகிட்ட மாட்டிகிச்சி...
  அப்பா அந்த குட்டி எலி, பூனைகிட்ட "அண்ணே.. நான் எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பையன்...
   என்னை விட்டுடுங்க.. சாப்டிராதீங்க"ன்னு சொன்னுச்சாம்.. அதுக்கு அந்த பெரிய பூனை
   என்ன சொல்லுச்சாம் தெரியுமா?
?
?
?
?
?
?
?
?
?
?
ஹலோ! கதை கேக்குற வயசா இது?
போய் வேலைய பாருங்க! போங்க!!

4) நான் ஸ்கூல்'ல படிச்சிகிட்டு இருக்கும்போது,  ஒரு நாள் கிளாஸ்'ல பாடம் நடத்திகிட்டு இருக்கும்போது
  பேசிகிட்டு இருந்தேன். அப்போ எங்க மிஸ் "நான் இனி கிளாஸ்'ல பேச மாட்டேன்" என்று 50 தடவை
  எழுத சொல்லி தண்டனை கொடுத்தாங்க. நான் எப்படி எழுதினேன்னு  தெரியுமா?
?
?
?
?
?
?
?
for (int i= 1; i <= 50; i++)
{
  printf("\n I won't talk in Class");
}
எப்பூடி?
நாங்கல்லாம் அப்பவே அப்படி!

5) மலர் தூவியும்
    மனம் இறங்காத அவள்
    இன்று
    கண்ணீருடன்
    மலர்
    தூவுகிறாள்....
    என்
     திருமணத்தில்....
    (கல்லறை எல்லாம் இல்ல) நமக்கு 1000 பிகர் மடியும் மச்சி!

6) லவ் பண்ணுக சார்! லைப் நல்லா இருக்கும் --- from MYNA...
    படிச்சு தொலைடா! லைப் நல்லா இருக்கும் --- from my Nainaa...

7) ஐஸ்-கிரீம் கடைக்கும், ஒயின் கடைக்கும் என்ன வித்தியாசம்?
    லவ்  ஐஸ்-கிரீம் கடைல ஆரம்பிக்கும்!
    ஒயின் கடை(wine shop)ல முடிஞ்சு போய்டும்!!

8) உறங்க
    மனமில்லை
    நினைவில் நீ...
    உறங்கினால்
    விழிக்க
    மனமில்லை
    கனவில் நீ......

    வர வர பேய் பிசாசுங்க தொல்லை தாங்க முடியலப்பா!

9)  ஏங்க சார், பையன போட்டு இப்படி அடிக்குறீங்க?

       பின்ன என்னங்க? கோழி ஏன்டா முட்டை போடுதுன்னு கேட்டா,
      அதுக்கு 1, 2,3... தெரியாது, அதனால முட்டை போடுதுன்னு சொல்றான்!

10) நீ பார்க்கும்
      பார்வையும்
     சிரிக்கும்
     சிரிப்பும்
     நீ என்னை
    காதலிக்கிறாய்
    என்பது
    புரிகிறது...
    ஆனால்
     வேண்டாம் பெண்ணே!
    மீசை கூட
    வளராத வயதில்
    என்னால்
    தாடி வளர்க்க
     முடியாது!!
   --- LKG Last Bench Boy...

வாழ்க  வளமுடன்!

Thursday, December 9, 2010

எப்படி இது சாத்தியமாயிற்று?

இன்று எங்கள் அலுவலகத்திற்கு ஒரு வேலை விசயமாக  ஒருவர் வந்தார். போகும்போது அவருடைய  விசிட்டிங் கார்டு கொடுத்துவிட்டு போனார். மயக்கம் வராத குறைதான். அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. அழுவதா அல்லது சிரிப்பதா தெரியவில்லை.  அவருக்கு ஒரு 40 - 45 வயதிற்குள்தான் இருக்கும். எப்படி சாத்தியமாயிற்று?(!)?....

நாட்டில் இப்படியும் இருக்கிறார்களா?...

உங்கள் பார்வைக்காக அவருடைய தனிப்பட்ட அடையாளத்தை மறைத்துவிட்டு இங்கே கொடுத்திருக்கிறேன்...  எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.... புரிந்தவர்கள் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போங்கள்,  தயவுசெய்து..



ஆனால் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டித்தான் ஆகவேண்டும்... இல்லீங்களா?......

வாழ்க வளமுடன்!