Wednesday, December 24, 2008

பப்ளிக்குட்டி செய்துவிடாதீர்கள் (நகைச்சுவை)

உங்களில் பலபேர் இந்த நகைச்சுவையை முன்பே கேள்விபட்டிருக்கலாம். இருந்தாலும் நகைச்சவை படங்களை நாம் பலமுறை பார்ப்பதுபோல் இதையும் நீங்கள் மீண்டும் படிக்கலாம்.

ஒரு இன்ஸ்பெக்டர்(கல்வி) ஒரு வகுப்பறைக்கு சென்று ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது ஒரு மாணவன் எலெக்ட்ரிசிட்டி என்பதை எலெக்ட்ரிகுட்டி என்கிறான். இன்ஸ்பெக்டர் ஆசிரியரைப் பார்க்கிறார். அவர் விடுங்க சார், அவன் கப்பாகுட்டி அவ்வளவுதான் என்றார். பின் தலைமை ஆசிரியரைப் பார்க்கிறார் இன்ஸ்பெக்டர். அவர் சாரி சார், இதை பப்ளிக்குட்டி பண்ணி விடாதீர்கள் என்றார்.

அதே இன்ஸ்பெக்டர் நொந்து நூடுல்ஸ் ஆகி அடுத்த வகுப்பறைக்கு சென்றார். அப்பொழுது ராமாயணம் நடத்திகொண்டிருந்தார் ஆசிரியர். ஆய்வாளர் ஒரு மாணவனிடம் தசரதனின் வில்லை யார் ஓடித்தர்கள் என்று கேட்டார். அவன் அழுது கொண்டே சத்தியமாக நான் ஒடிக்கவில்லை என்றான். ஆய்வாளர் வகுப்பாசிரியரைப் பார்த்தார். அவர் ஆமாம் சார் அவன் அப்படித்தான் செய்த குற்றத்தை எப்பவுமே ஒத்துகொள்ள மாட்டான் என்றார். உடனே தலைமை ஆசிரியர் ஆய்வாளரிடம் "விடுங்க சார், அந்த வில்லுக்குப் பதிலாக எவ்வளவு செலவு ஆனாலும் புதியதாக ஒரு வில்லை வாங்கிவிடலாம்" என்றார். அந்த ஆய்வாளர் பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடி விட்டார்.

உங்கள் பள்ளிக்கால நினைவுகளை கொண்டுவரும், நீங்கள் கீழே உள்ளதைப் படித்தால். ஒரு வரிக் கூட விடாமல் படிக்கவும்.என்ன நண்பர்களே, மனம்விட்டு சிரித்தீர்களா?

Tuesday, December 23, 2008

உங்கள் செல்பேசியின் தகவல் அறிய

இப்பொழுது IMEI (International Mobile Equipment Identity) இல்லாத சீன, கொரிய மொபைல் போன்களை தடை செய்யபோவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எல்லா மொபைல் போன்களுக்கும் ஒரு தனி(unique) எண் உள்ளது. இதை அறிய உங்கள் அலை பேசியில் *#06# என்று டைப் செய்தால் உங்கள் அலை பேசியின் IMEI எண் தரப்படும். இந்த IMEI எண்ணை கீழ்க்காணும் தளத்திற்கு சென்று கொடுத்தீர்கள் என்றால், உங்கள் அலை பேசி தயாரித்த வருடம், இடம், ஆண்டு மற்றும் பல முக்கிய தகவல்கள் தரப்படும்.
https://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr

IMEI இல்லாத அலைபேசிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தும் போது அவர்களின் தகவல்களை அறிய முடிவதில்லையாம்.
நம் தேசத்தின் நலன் கருதி இயன்றவரை தரமான உண்மையான அலை பேசிகளையே பயன்படுத்துவோம். பாதுகாப்புகளற்ற அலை பேசிகளை இறக்குமதி செய்வதற்கு முன்பே நம் அரசு யோசித்து இருக்க வேண்டாமா?
அரசாங்கத்தையே குற்றம் சொல்லி கொண்டிருக்காமல் நாமும் இந்த விசயத்தில் ஒத்துழைப்பு கொடுத்து தீவிரவாத செயல்களிலிருந்து நமது தேசத்தை காப்போமாக!!!

Friday, December 19, 2008

பிள்ளையார் சுழி.

முரண்பாடுகள்
------------------------
ஆயுள் காப்பீடு
அவசியம் செய்வீர்
விளம்பர பலகை
எழுதி கொண்டிருக்கிறார்
உச்சியில் இருந்தபடி
தனக்கொரு
ஆயுள் காப்பீடு
இல்லாமல்.

இங்கு
சிறுநீர்
கழிக்காதீர்
என்று
எழுதி இருந்த
சுவற்றின் மேலேயே
கழித்து கொண்டிருக்கிறார்
சிறுநீர்.

உன் முகத்தை
தினம்
ஒரு முறையாவது
பார்த்தால்தான்
எனக்கு நிம்மதி.
இது காதலியாய் இருக்கும்போது.
உன் முகத்தை
பார்த்துவிட்டு
போனால்
எதாவது
விளங்குமாடி?
இது அதே காதலி
மனைவியான பின்பு.

ஊழலை
ஒழிப்பதுதான்
எங்கள் ஆட்சியின்
நோக்கம்.
முழங்கி கொண்டிருக்கிறார்
ஒவ்வொரு வோட்டுக்கும்
ஒரு குடம்
கொடுத்துவிட்டு.

வரதச்சனையை
ஒழித்திடுவோம்.
பெண்கள்
நம் நாட்டின்
கண்கள்.
உரையாற்றி கொண்டிருக்கிறார்
தன் மருமகளிடம்
வரதச்சனையாக
வாங்கிய காரில்
வந்திறங்கியவர்.
---------------------------------------------------------

சப்ஜெக்ட்க்கும் இந்த கவிதைக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லையென குழப்பமா? இதுதான் என் முதல் கவிதை முயற்சி. அதனால்தான்.

ஹலோ இது கவிதை என்று நம்பி எழுதி இருக்கிறேன்.வார்த்தையை ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதினால் அது கவிதையாமே!நம்ம பார்த்திபன் கூட ஒரு படத்தில் சொல்லி இருக்காருங்க.அதனாலே நீங்க இதை கவிதை என்று ஒத்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.........

அன்புடன்,
மோகனச்சாரல்