Tuesday, January 27, 2009

நமது ஹீரோக்களின் அடுத்த படத்தலைப்புகள்

இது ஈ-மெயிலில் நண்பர் அனுப்பியது, நகைச்சுவைக்காக மட்டுமே, தீவிர ரசிகர்கள் எவரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

ரஜினி:
ரோபோ, ரிமோட் கார், ப்ளேன், பேட்டரி ட்ரைன், ஜெட்.

விஜயகாந்த்:
தர்மபுரி, சேலம், ஈரோட், நாமக்கல், தூத்துக்குடி, மயிலாடுதுறை.

விஜய்:
வில்லு, அம்பு, கபடா, கத்தி, கம்பு.

சூர்யா:
வாரணம் ஆயிரம், தோரணம் ரெண்டாயிரம், பூரணம் மூவாரயிரம், பஞ்சவர்ணம் நாலாயிரம்.

சிம்பு:
சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், பாம்பாட்டம், குத்தாட்டம்.

ஜீவா:
ஈ, கொசு, எறும்பு, கரப்பன் பூச்சி, மண்புழு, நாயே, பேயே.

விஷால்;
சத்யம், சாந்தம், அபிராமி, தேவிபாரடைஸ்.

பரத்:
சேவல், புறா, வாத்து, மைனா.

சேரன்:
ராமன் தேடிய சீதை, அனுமன் தேடிய சீதை, ராவணன் கடத்திய சீதை.

நகுல்:
காதலில் விழுந்தேன், பைக்ல விழுந்தேன், ரோடுலே விழுந்தேன், கீழ விழுந்த டிட்சில்ல விழுந்தேன்.

ஜீவன்:
தோட்டா, புல்லட், ரிவால்வர், ரைபில்.

விக்ரம்:
கந்தசாமி, கருப்பசாமி, குப்புசாமி, குழந்தைசாமி.

தனுஷ்:
படிக்காதவன், முட்டாள், தருதல.

ஆர்யா:
நான் கடவுள், நான் பேய், நான் அரக்கன், நான் எமன்.

ஜெயம் ரவி:
சம்திங் சம்திங், நத்திங் நத்திங், எவெரிதிங் எவெரிதிங், எனிதிங் எனிதிங்.

நரேன்:
5 ஆதே , 6 ஆதே, 7 ஆதே, 8 ஆதே

சரத்குமார்:
1977, 1976, 1975, 1974, 1973

SJ சூர்யா:
நியூட்டன்'ஸ் 3 ர்ட் லா, பாஸ்கல்'ஸ் லா, ஹூகே'ஸ் லா, ஷகிலா.

மாதவன்:
குரு என் ஆளு, த்ரிஷா உன் ஆளு, நமீதா என் ஆளு

கார்த்தி:
பருத்தி வீரன், புண்ணாக்கு வீரன், தீவனம் வீரன்.

சாந்தனு:
சக்கரைகட்டி, உப்புகட்டி, சுண்ணாம்பு கட்டி.

மக்களின் பேராதரவுடன் கீழ்கண்டவை சேர்க்கப்பட்டது:
கமல்:
தசாவதாரம், சதவதாரம்,தசாசதவதாரம்(ஆயிரம் அவதாரம்)...

அஜித்:
ஏகன், குகன், மகன், மடையன், கிறுக்கன், செவிடன்.

Thursday, January 22, 2009

உங்கள் இதயம் காக்க - சில பயனுள்ள சந்தேகங்களும், விளக்கங்களும்

டாக்டர் தேவி ஷெட்டி, நாராயண ஹிருதயலயா (இதய சிறப்பு மருத்துவர்), பெங்களூரு, அளித்த கேள்வி பதில்கள். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

இதயத்தை காக்க ஒரு மனிதன் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விதிகள் எவை?
1. டயட் - குறைந்த எண்ணெய், குறைந்த கார்போ ஹைட்ரட், அதிகமான புரோட்டின்
2. உடற்பயிற்சி - அரை மணி நேர நடை, குறைந்த பட்சம் வாரத்தில் 5 நாட்கள். ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வதையும், லிப்ட் பயன்படுத்தவத்தையும் தவிருங்கள்.
3. புகை பிடிப்பதை அறவே நிறுத்தி விடுங்கள்.
4. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.
5. இரத்த அழுத்தம் மற்றும் சர்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருங்கள்.

அசைவ உணவு குறிப்பாக மீன் இதயத்திற்கு நல்லதா?
இல்லை.

நல்ல உடல் நலமுள்ளவர்களுக்கும் இதய நிறுத்தம் ஏற்படுகிறதே? இதை எப்படி அறிந்து கொள்வது?
இதைதான் சைலென்ட் அட்டாக் என்று சொல்கிறோம். எனவேதான் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு ஒரு முறை ஹெல்த் செக்கப் செய்து கொள்ள வலியுருத்துகிறோம்.

இதய நோய் மரபு வழி வரக்கூடியதா?
ஆம்

இதய அழுத்தத்தை தவிர்க்க சில வழிகள்?
உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி கொள்ளுங்கள். உங்களின் வாழ்கையில் ஒவ்வொரு விசயத்திலும் நிறைவை (Perfection) எதிர்பார்ப்பதை தவிருங்கள்!

இதயத்தை காக்க ஓட்ட பயிற்சியை விட நடை பயிற்சி சிறந்ததா?
நடை பயிற்சியே, ஓட்ட பயிற்சியை விட சிறந்தது. ஓட்ட பயிற்சியின் பொது விரைவிலேயே சோர்வு வந்துவிடும் மேலும் மூட்டில் (Joints) பிரச்சனை ஏற்படலாம்.

குறைந்த இரத்த அழுத்தமுள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்பட வாயிப்புள்ளதா?
மிகவும் அரிதாக.

கொழுப்பு நமது உடலில் எந்த வயதிலிருந்து சேருகிறது?
குழந்தை பருவத்திலிருந்தே!

முறையற்ற உணவு பழக்கம் எப்படி இதயத்தை பாதிக்கிறது?
நீங்கள் எடுத்துக்கொள்ளும் முறையற்ற துரித உணவு வகைகள் உங்கள் உடலின் செரிமான வினைவூக்கியை குழப்புகிறது.

கொழுப்பை மாத்திரை இல்லாமல் எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது?
உணவுக் கட்டுப்பாடு, நடை பயிற்சி மற்றும் வால்நட்டை(ஜாதிக்காய்) (walnut) சாப்பிடுங்கள்.

யோகா உதவுமா?
ஆம்.

இதயத்திற்கு சிறந்த மற்றும் மோசமான உணவு என்ன?
பழங்கள் மற்றும் காய்கறிகள் சிறந்தது. எண்ணெய் மோசமானது.

எந்த எண்ணெய் சிறந்தது? கடலை எண்ணெய், சன்பிளவர் அல்லது ஆலிவ்?
எல்லா எண்ணெய்களுமே மோசமானது.

இதயத்தை காக்க எதுவும் குறிப்பிட்டு சொல்லும் படியான முறையான செக்கப்?
இரத்த சோதனை- சர்க்கரையின் அளவை அறிய, இரத்த அழுத்த சோதனை, கொழுப்பு சோதனை., Treadmill test after an echo(மொழி பெயர்க்க முடியல)

மாரடைப்பின் போது எடுக்கவேண்டிய முதலுதவி என்ன?
பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட்(sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டி செல்லவும். பெரும்பாலான பாதிப்புகள் முதல் ஒரு மணி நேரத்திலேயே ஏற்படுகிறது.

மாரடைப்பால் ஏற்படும் வலியையும், வாயுத் தொல்லையால் ஏற்படும் வலியையும் எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்?
மிகவும் அரிது, ஈ.சீ.ஜீ (ECG) சோதனை இல்லாமல்.

இளம் வயதிலேயே இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட முக்கிய காரணம் என்ன? தற்போது 30-40 வயது உடையவர்கள் கூட மாரடைப்பினாலும், கடுமையான இதய நோய்களினாலும் பாதிப்படைகிறார்களே?.
அதிகமான விழிப்புணர்வு அதிகமான நிகழ்வுகளை ஏற்படுத்திவிட்டது. முறையற்ற மற்றும் அதிக உடலுழைப்பு இல்லாத, உட்கார்ந்தே இருக்கக் கூடிய வாழ்க்கை முறை, புகைப்பழக்கம், துரித உணவுகள் (Junk Food), குறைவான உடற்பயிற்சி இருக்கும் நாடுகளில் மாரடைப்பு ஏற்படுவது மரபணு ரீதியாக மும்மடங்கு அதிகமாக இருக்கிறது, இது ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை விட அதிகம்.

ஒரு மனிதனின் சாதாரண இரத்த அழுத்த அளவான 120/80, என்பதற்கும் அதிகமாக இருந்தாலும் கூட ஆரோக்கியமாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?
வாய்ப்பு இருக்கிறது..

நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமா?
கண்டிப்பாக அதிகம் வாய்ப்புகள் உள்ளது. அது மட்டுமில்லாமல் பிறவி குறைபாடும் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.

எங்களில் பெரும்பாலோர் இரவு அதிக நேரம் அலுவலகத்தில் வேலை செய்ய நேரிடுகிறது. இதனால் இதய பாதிப்பு ஏற்படுமா? என்ன முன்னேற்பாடுகள் இதற்க்கு எடுத்துக் கொள்ளலாம்?
இளம் வயதில் இயற்கையிலேயே நமது உடல் இது போன்ற முறையற்ற வாழ்க்கை முறையை எதிர்த்து காக்கிறது. எனினும் வயது ஆக ஆக முறையான வாழ்க்கை முறைக்கு வந்து விடுவது அவசியம்.

இரத்த அழுத்தத்தை கட்டு படுத்துவதற்கு எடுத்து கொள்ளும் மாத்திரைகளினால் (anti-hypertensive) ஏதேனும் குறுகிய/நீண்ட கால பக்க விளைவுகள் ஏற்படுமா?
ஆம். பெரும்பாலான மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இருந்தாலும் இந்த நவீன காலத்தில் வரும் மாத்திரைகள் மிகவும் பாதுகாப்பானதே!

அதிகமாக காபி, டீ அருந்துவதால் பாதிப்பா?
இல்லை.

ஆஸ்த்மா நோயாளிகளுக்கு இதே நோய் ஏற்பட வாய்ப்பு அதிகமா?
இல்லை.

துரித (குப்பை) உணவுகள் (Junk Food) என்று எவற்றைக் குறிப்பிடலாம்?
வறுக்கப் பட்ட உணவுகள், சமோசா மற்றும் மசாலா தோசை
(Fried food like Kentucky, McDonalds, samosas, and even masala dosas)

ஐரோப்பிய மற்றும் அமெரிக்கர்களை விட இந்தியர்களுக்கு இதய நோய் ஏற்பட மும்மடங்கு வாய்ப்புக்கள் அதிகம் ஏன்? அவர்களும் நிறைய துரித (Junk) உணவுகள் சாப்பிடுகிறார்களே?
ஒவ்வொரு இனமும் சில குறிப்பிட்ட நோய்களுக்கு இலக்காகிவிடுகிறது, துரர்த்திஷ்ட வசமாக இந்தியர்கள் இது போன்ற கடுமையான நோய்களுக்கு இலக்காகி விடுகிறார்கள்.

வாழைப்பழம் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் கட்டுப்படுமா?
இல்லை.

மாரடைப்பின் போது ஒருவர் தனக்குத் தானே முதலுதவி எடுத்துக் கொள்ள முடியுமா? ஏனெனில் இது சம்பந்தமான ஈ-மெயில்களை அடிக்கடி படிக்க நேர்கிறது.
கண்டிப்பாக முடியும். வசதியாக படுத்துக் கொண்டு நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை வைத்துக்கொள்ளவும். உடனே அருகிலுள்ள இதய சிறப்பு மருத்துவரிடம் தாமதிக்காமல் கூட்டி செல்ல கேட்டுக் கொள்ளவும். கண்டிப்பாக ஆம்புலன்ஸ்க்காக காத்திராமல் சென்று விடவும், பெரும்பாலான நேரங்களில் ஆம்புலன்ஸ் உதவுவதில்லை .

இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மற்றும் ஹீமோக்ளோபின் குறையும் போது மாரடைப்பு ஏற்படுமா?
இல்லை. இருந்தபோதிலும் நல்ல உடல் நலத்திற்கு இதன் அளவுகள் சரியாக இருப்பது நல்லது/ அவசியம்.

தவிர்க்க முடியாத காரணங்களால் சில நேரம் உடற் பயிற்சி செய்யாத போது, வீட்டிலும், அலுவலகத்திலும் நடப்பது, படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது போன்ற செயல்கள் உடற் பயிற்சிக்கு மாற்றாக அமையுமா?
கண்டிப்பாக. அரை மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து ஒரே இருக்கையில் அமர்வதை தவிர்க்கவும். ஒரு இருக்கையில் இருந்து அடுத்த இருக்கைக்கு சென்று அமர்ந்து பழக்கப்படுத்தி கொள்வது கூட சிறிது உதவும்.

இதய நோய்க்கும், இரத்தத்திலுள்ள சர்க்கரைக்கும் தொடர்புள்ளதா?
ஆம். நெருங்கிய தொடர்பு உள்ளது. சர்க்கரை நோய் இல்லாதவர்களை(non-diabetics) விட அது உள்ளவர்களுக்கு(diabetics) மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம்.

இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
1) முறையான உணவு (Diet), உடற் பயிற்சி, சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்வது.
2) கொழுப்பு (cholesterol), இரத்த அழுத்தம், எடை - இவற்றை கட்டுக்குள் வைத்திருப்பது.

பகலில் பணி புரிபவர்களை விட இரவில் பணி புரிபவர்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்க படுவார்களா?
இல்லை.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நவீன சிறந்த மாத்திரை என்ன?
நூற்றுக்கணக்கான மருந்து மாத்திரைகள் சந்தையில் உள்ளன. உங்கள் உடலுக்கும் பிரச்சனைக்கும் தகுந்ததை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். என்னுடைய அறிவுரை என்னவெனில் மருந்து மாத்திரைகளை பெரும்பாலும் தவிர்த்துவிட்டு இயற்க்கை வழிக்கு செல்லவும், அதாவது நடை பயிற்சியின் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது, முறையான உணவு மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது.

டிஸ்பிரின் (Dispirin) மற்றும் இது மாதிரியான தலை வலி மாத்திரைகள் மாரடைப்பு வாய்ப்பை அதிகப்படுத்துமா?
இல்லை.

மாரடைப்பு வாய்ப்பு ஏன் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமா உள்ளது?
இயற்கையே 45 வயது வரை பெண்களைக் காக்கிறது.

ஒருவர் எவ்வாறு தம் இதயத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்வது?
ஆரோக்கியமான நல்ல உணவு பழக்கம், துரித உணவு (Junk Food) வகைகளை தவிர்ப்பது, தினமும் உடற்பயிற்சி, புகை பிடிப்பதை தவிர்ப்பது, மேலும் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது, நீங்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால். (6 மாதத்திற்கு ஒரு முறை பரிந்துரைக்கப்படுகிறது).

கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

********************************************

இந்த பதிவு என் தளத்திலிருந்து என் அனுமதி இல்லாமலே அப்படியே மற்றொரு பதிவில் இடப்பட்டுள்ளது! குறைந்தபட்சம் இங்கிருந்து எடுக்கப்பட்டது என்றாவது சொல்லி இருக்கலாம்.

************************************************

சத்யம் ராஜு பையாக்கா தாபா (உணவகம்)

ஒன்றும் சொல்வதற்கில்லை!
படத்தை பெரிதாக்க படத்தின் மேல் க்ளிக் செய்யுங்கள்!

Wednesday, January 21, 2009

தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்றா அல்லது தை ஒன்றா

ஈ-மெயிலில் வந்தது. இங்கு உங்களின் பார்வைக்காக.... ஒரே குழப்பமாக இருக்கிறது. ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை


WE HAVE TO FOLLOW & LIVE WITH NATURE,
POLITICAL OR THE RULERS ARE SECONDARY,
WE SHOULD NOT MISGUDIE OUR NEXT GENERATIONS...
---------------------------------------------------------------------------------------

இப்ப சொல்லுங்க! தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்றா அல்லது தை ஒன்றா, குழப்பதை தீருங்க!

Monday, January 19, 2009

கையில் வரைந்த கலை(கை) வண்ணம்.

ஈ-மெயிலில் வந்த படைப்பு, மிகவும் ரசிக்கும் படியாக இருந்ததால் உங்கள் பார்வைக்காகவும் இங்கே...Football Players
Pianist
PeacockRooster
GoalkeeperConductorCanoeistAthletes


Weight-lifter

முத்தான தகவல்கள்(கணினி) பத்து

இது ஒன்றும் புதியதாக கண்டுபிடித்து சொல்லும் தகவல்கள் அல்ல. உங்களுக்கு தெரிந்ததை ஞாபகப்படுத்தும் ஒரு சிறு முயற்சி. ஒருவருக்கேனும் பயன்படுமானால் எழுதியதன் நோக்கம் நிறைவேறும்.

1) உங்கள் கணினியில் உள்ள Folder களில் Right click செய்யும் போது Security மற்றும் Sharing Tab தெரியாமல் இருந்தால்.....
Windows Explorer ---> Tools --->Folder options--->View இங்கு கடைசியில் Use Simple File Sharing (Recommended) என்பதில் டிக் மார்க் இருந்தால் அதை நீக்கி விடவும். டிக் மார்க் இல்லாமல் இருந்தால் Apply to All Folders என்பதை கிளிக் செய்து Yes option ஐத் தேர்வு செய்யவும். பின் Folder களில் Right click செய்யும் போது Security மற்றும் Sharing Tab தெரியும்.

2) உங்கள் Windows Media Player இல் சமீபத்திய File களின் History ஐ நீக்க வேண்டுமானால்.......
Run-->Regedit --->HKEY_CURRENT_UER--->Software---> Microsoft
---> MediaPlayer ---> Player ---> RecentFileList

இங்கு சென்று நீக்கிக் கொள்ளலாம்.

3) Ubuntu Operating System

இதை Linux பற்றி அதிகம் தெரியவதர்கள் கூட எளிதில் புரிந்துகொண்டு பயன்படுத்தும் படி இலவசமாகவே அளிக்கிறார்கள். Windows Operating System இல் எதாவதொரு Drive இல் Install செய்து கொள்ளலாம். Un-Install செய்ய Windows இல் Add/Remove Programs சென்று நீக்கி கொள்ளலாம். தளத்திலிருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தளத்தில் பதிவு செய்து கொண்டு முகவரி அளித்தால் இலவசமாகவே CD அனுப்பி விடுகிறார்கள். இந்த CD ஐப் பயன்படுத்தி நமது கணினியில் Install செய்யாமல் கூட நேரிடியாக இந்த OS ஐப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

திடிரெனே உங்கள் Windows பழுது அடைந்து விட்டால் இந்த OS இல் இருந்து உங்கள் தகவல்களை எடுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் இந்த Ubuntu OS, Linux கற்றுக் கொள்ள நினைப்பவர்களுக்கும், எதிர்பாராத நேரத்தில் விண்டோஸ் பழுதாகிவிட்டால் உங்கள் தகவல்களை முழுமையாக பெறவும் இன்னும் பல நன்மைகளை தரவல்லது.

இதை இலவசமாக பெற இங்கே செல்லவும்
http://www.ubuntu.com/getubuntu

4) உங்கள் விண்டோஸ் பதிப்பு எதுவாக இருந்தாலும் CON அல்லது con என்ற பெயரில் Folder, File Name உருவாக்க முடியாது. காரணம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் தெரிவிக்கலாம்.

5) யூனிகோட் (Unicode) வசதியை உங்கள் கணினியில் நிறுவ கீழ்க்கண்டவாறு செய்யவும். இது விண்டோஸ் XP க்கு பொருந்தும்
1. Go to control panel / Regional and Language options
2. Check on “Install fonts for complex scripts…”
3. Click on “Apply”
4. System will prompt for OS CD.
5. Insert the CD and click “OK”.
6. Reboot the system

பின்பு உங்களுக்கு எந்த மொழி வேண்டுமோ அந்த மொழியை control panel / Regional and Language/Details options சென்று தேர்ந்தெடுத்து சேர்த்துக் கொள்ளவும். உங்கள் Task Bar இன் வலதுபுறம் Language Bar தெரியும். அங்கு Click செய்து தேவையான மொழியை தெரிவு செய்து கொள்ளவும். நீங்கள் ஆங்கிலத்தை தெரிவு செய்தால் EN என்றும் தமிழை தெரிவு செய்தால் TA என்றும் தோன்றும்.

6) உங்கள் கணினியின் பொதுத் தகவல்களை (Configuration) அறிய RUN ---> msinfo32.exe என்று கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்.

7) ப்ரீவேர் (Freeware software) சாப்ட்வேர் என்றால் முற்றிலும் இலவசமாக நமக்கு கிடைப்பது. ஷேர்வேர் சாப்ட்வேர் (Shareware Software) என்றால் ஒரு குறிப்பிட்ட காலம் இலவசமாக பயன்படுத்திவிட்டு பிடித்திருந்தால் பின் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வது. இது பெரும்பாலும் அதிக விலை இருக்காது மற்றும் இணையத் தளத்திலிருந்து இறக்கம் செய்வது போலிருக்கும்.

8) உங்கள் கணினியை ஆன் செய்தவுடன் யூசெர் நேம், பாஸ்வோர்ட் இல்லாமல் நேரிடையாக செல்வதற்கு கீழ்க்கண்டவாறு செய்யவும். இது விண்டோஸ் எக்ஸ்பீக்கு பொருந்தும்.

Start---> Run---> control userpasswords2 என டைப் செய்து ok கொடுக்கவும்.

எந்த யூசெர் நேமிலிருந்து நீங்கள் செல்ல வேண்டுமோ அந்த யூசெரை செலக்ட் செய்து கொண்டு "Users must enter a user name and password to use this computer" என்பதில் டிக் மார்க்கை நீக்கிவிட்டு Apply செய்யவும். பின் தோன்றும் விண்டோசில் உங்கள் கடவுச்சொல்லை (Password) இரு முறைக் கொடுத்து OK செய்து மூடி விடவும்.
இனி நீங்கள் அடுத்த முறை கணினியை இயக்கும்போது யூசெர் நேம், பாஸ்வோர்ட் இல்லாமல் நேரிடையாக உங்கள் கணினி விண்டோசிற்கு சென்றுவிடும்.

9) Remote Desktop Connection என்பது உங்கள் கணினியிலிருந்து அதே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் மற்றொரு கணினியை இணைப்பது. இதை Start ---> Program --> Accessories ---> Remote Desktop connection சென்று பெறலாம். உங்கள் கணினியிலிருந்து அடுத்த கணினியை இப்படி இணைத்து அந்த கணினியை உங்களது முழுக் கட்டுபாட்டில் கொண்டு வரலாம். இணைக்கும்போது IP Address மற்றும் யூசெர்நேம், பாஸ் வோர்ட் தரவேண்டும்.

அப்படி இணைத்த கணினியிலிருந்து உங்கள் கணினியின் Drive களை பயன்படுத்த கீழ்க்கண்டவாறு செய்யவும்.
IP அட்ரஸ் கொடுக்கும் விண்டோசில் Options என்பதை கிளிக் செய்யவும்.

பின் Local Resources என்பதைக் கிளிக் செய்து Local devices and resources என்பதில் More என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் உங்களுக்கு தேவைப்படும் Drive களை தேர்தெடுத்துக் கொண்டு O.K. செய்யவும். இனி நீங்கள் Remote Desktop Connection இல் மற்றொரு கணினியை இணைத்தவுடன் அதில் உங்களின் லோக்கல் கணினியின் Drive களையும் Access செய்து கொள்ளலாம்.

கடைசியாக நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது Remote Desktop Connection ஐத் துண்டிக்க Log Off மட்டுமே செய்யவேண்டும், Shut Down செய்து விடக்கூடாது. Log Off செய்வதே சரியான வழி.

10) கீழ்க்காணும் வலைத்தளத்தில் உங்கள் ஈ-மெயில் முகவரிக் கொடுத்து பதிவு செய்து கொண்டால் தினமும் உங்கள் முகவரிக்கு ஒரு கணினி சார்பான தகவலை (computer and Internet technology definitions) அனுப்பி விடுவார்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

http://www.webopedia.com/

Wednesday, January 7, 2009

புரிவதில்லை


காதலித்துபார்
வானம் வசப்படும்
பூமி வசப்படும்
என்கின்றனர்
ஆம்.
ஒருவரும்
எந்த இடத்திலும்
காதலியின்
மனம் வசப்படும்
என்று
சொல்லவில்லை.எனக்காக
எதையும்
தியாகம் செய்.
ஆனால்
எதற்காகவும்
என்னை
தியாகம்
செய்துவிடாதே
என்றாய்.
இப்பொழுது
"எதற்காக"
என்னை
தியாகம்
செய்தாய்?


ஒவ்வொரு
முறையும்
உன் வாசலை
கடக்கும்போது
உன்
கொலுசொலி
சொல்லும்
சங்கேதம்
புரிவதில்லை
எனக்கு.காதலால்
கசிந்துருகி
கால்கடுக்க நின்று
எவ்வளவோ
பேசினாலும்
நீ
பதிலாகத்
தரும்
மௌனத்திற்கு
அர்த்தம்
விளங்குவதில்லை
எனக்கு!