Wednesday, January 7, 2009

புரிவதில்லை


காதலித்துபார்
வானம் வசப்படும்
பூமி வசப்படும்
என்கின்றனர்
ஆம்.
ஒருவரும்
எந்த இடத்திலும்
காதலியின்
மனம் வசப்படும்
என்று
சொல்லவில்லை.



எனக்காக
எதையும்
தியாகம் செய்.
ஆனால்
எதற்காகவும்
என்னை
தியாகம்
செய்துவிடாதே
என்றாய்.
இப்பொழுது
"எதற்காக"
என்னை
தியாகம்
செய்தாய்?


ஒவ்வொரு
முறையும்
உன் வாசலை
கடக்கும்போது
உன்
கொலுசொலி
சொல்லும்
சங்கேதம்
புரிவதில்லை
எனக்கு.



காதலால்
கசிந்துருகி
கால்கடுக்க நின்று
எவ்வளவோ
பேசினாலும்
நீ
பதிலாகத்
தரும்
மௌனத்திற்கு
அர்த்தம்
விளங்குவதில்லை
எனக்கு!

No comments: