Monday, August 30, 2010

உயிர் காக்க உதவுங்கள்....

இந்த செய்தி 29-08-2010 ஞாயிறு அன்று ஒரு நாளிதழில் வெளியானது. ஒரு ஏழைக் குழந்தையின் சிறு நீராக கோளாறின் பொருட்டு வரும் செப்டம்பர் 10ம் தேதி அன்று   அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் போலிருக்கிறது.  படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்...
 போன் செய்து விசாரித்தேன்.  கலைஞர் காப்பீடு திட்டத்தை தாண்டியும் அவர்களுக்கு பண உதவி தேவைபடுவதாக அறிந்தேன். அவர்கள் கொடுத்த விளம்பரத்தில் வங்கி எண் தரவில்லை. நான்தான் கேட்டு வாங்கினேன். என்னால் முடிந்ததை அனுப்பி விட்டேன்.  வங்கி கணக்கு விபரங்களை இங்கே தருகிறேன்.

பெயர்: K. கவிதா
வங்கி எண்: 444602010105205     IFSC Code: UBIN0544469
வங்கி பெயர்: Union Bank Of India, Karur. Tamil Nadu.
 (விளம்பரத்திலும், வங்கியிலும் இந்த சிறுமியின் இன்சியல் வேறுபட்டு இருப்பதை நான் விசாரித்து தெளிவுபடுத்தி கொண்டேன். எனவே யாரும் இது சம்பந்தமாக அவர்களை கேட்டு தர்மசங்கடப்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.)

இதைபார்த்து யாருக்கேனும் உதவ மனம் இருந்தால் உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் எனக்கு உறவினரோ அல்லது தெரிந்தவர்களோ அல்ல. எதோ இந்த பதிவில் போட்டு யாரேனும்
உதவி செய்தால் அந்த சிறுமிக்கு பேருதவியாக இருக்கும் என்ற நோக்கில் மட்டுமே இங்கே பதிவிட்டுள்ளேன்.

எல்லாம் வல்ல இறைவன் அந்த சிறுமியை காப்பாற்ற பிரார்த்திப்போம். 
வாழ்க  வளமுடன்!

Wednesday, August 25, 2010

ஒரு சாதாரணமான ஆனால் ஆழமான அர்த்தம் பொதிந்த கதை

ஒரு கல்லூரியின் முன்னால் மாணவர்கள் ஒரு சமயம், தங்கள் பேராசிரியர் ஒருவரின் வீட்டில்  ஒன்று கூடி தங்கள் கடந்த கால நிகழ்ச்சிகளை அசை போட்டு கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் தங்கள் வாழ்க்கை, வேலை மற்றும் மன அழுத்தம் சம்பந்தமாக அவர்கள் பேச்சு தொடங்கியது....

அப்போது அந்த பேராசிரியர், தன் மாணவர்களுக்காக ஒரு பெரிய பாத்திரத்தில் காபி'யும், பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார்.

கண்ணாடி, பிளாஸ்டிக், பூக்கள் வேலைபாடு நிறைந்த, பீங்கான், விலை உயர்ந்த  மற்றும்  சாதாரண என பல  வகை கோப்பைகளை வைத்து, காபி'யை தாங்களாகவே எடுத்துகொள்ளுமாறு கேட்டுகொண்டார்.

அனைவரின் கைகளிலும் காபி கோப்பை அவர்கள் அருந்த தயாராக இருந்தபோது பேராசிரியர் சொல்கிறார்...
"நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா? எல்லோருமே விலை உயர்ந்த, அழகான கோப்பைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு , சாதாரண கோப்பைகளை தவிர்த்து விட்டீர்கள். இது சாதாரணம் என்றாலும், என்ன தெரிகின்றது என்றால், எல்லோருமே சிறந்த ஒன்றை மட்டுமே எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள், இதுவே உங்கள் பிரச்சனை மற்றும் மன அழுத்தத்திற்கான காரணமாகும்".

உண்மையாக உங்களுக்கு எது வேண்டுமெனில் அந்த காபி'யே அல்லாது அந்த கோப்பைகள் அல்ல. ஆனால் நீங்கள் கோப்பைகளில்தான் அதிக கவனம் செலுத்தி, ஒவ்வொருவரும்  மற்றவர்களின் கோப்பைகள் மீதும்  உங்கள் கண்கள் செல்கிறது. இப்பொழுது, உங்கள் வாழ்க்கை காபி என்றால், உங்களின் வேலை, பணம், சமுதாயத்தில் உங்களின் நிலை இவைகள் கோப்பைகளாகும். அது உங்களின் வாழ்க்கைக்கு தேவையான ஒரு சாதாரண கருவியே அன்றி, அது உங்களின் வாழ்க்கையின் தரத்தை மாற்றிவிட முடியாது.  பல சமயங்களில், கோப்பைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி, அதிலிருக்கும் காபியை சுவைக்க தவறி விடுகிறீர்கள்.

எனவே, அந்த கோப்பைகள் உங்களை ஆதிக்கம் செலுத்துவதை தவிருங்கள். மாறாக காபியை ரசித்து, சுவைத்து, மகிழுங்கள்.

Thursday, August 19, 2010

எஸ்.எம்.எஸ் கலாட்டா – 19-08-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.

1) ஒரு பையன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். ஓட்டுனர் திடிரென பிரேக்  போட்டதால் அவன் ஒரு பெண்ணின் மீது விழுந்து, முத்தமும் கொடுத்து விடுகிறான்.
கேர்ள்: டேய்! என்ன பண்ற?
பையன்: B.E. 2nd இயர் ... நீ?
நீதி: பையன்களுக்கு எப்பவுமே படிப்புதான் தெரியும்.....

2) L I V E T O G E T H E R
இதை எப்படி படித்தீர்கள்?
Live Together அல்லது
Live  To Gether அல்லது
Live To Get Her
எப்படி வேண்டுமானாலும் படித்திருக்கலாம்..
வாழ்க்கை என்பது நீங்கள் ஒவ்வொன்றையும் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்
எனபதைப் பொறுத்தது......

3) நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது  வாழ்க்கை இனிமையானது...
ஆனால் அதையும் விட சிறந்தது, இனிமையானது மற்றவர்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் காரணமாக இருக்கும்போது...

4) வாழ்க்கை என்பது ஒத்திகை அல்ல.  ஒவ்வொரு நாளும் உண்மையான காட்சிகள் அடங்கியது. இங்கே ரீடேக், ரீவைண்ட்ற்கு இடமில்லை. எனவே மிகச் சிறந்த
செயல்பாட்டை அளியுங்கள் எல்லா விசயங்களிலும்...
----- ஷேக்ஸ்பியர்

5) இரயில்வேயில் வேலை....
சம்பளம்  70 ஆயிரம்...
வேலை விபரம்....
ரயிலின் முகப்பு விளக்கு பழுதாகி விட்டால்
டார்ச் விளைக்கை கையில் பிடித்துகொண்டு இரயிலின் முன்னே ஓட வேண்டும்!


6) பீலிங் கவிதை....
.....
.....
....
.....
.....
......
.....
.....
மன்னிக்கவும், பீலிங்'ல கவிதை வரல!

7) ஹலோ! அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருகிறது. கொஞ்சம்  கவனமாகவே இருங்கள். களிமண்ணுக்கு ரொம்பவும் டிமாண்டாக  இருக்கிறதாம். உங்கள் தலை பத்திரம். என்ன பண்றது? மனசு கேக்கல.. அதான்!
8) வெளி நாட்டிலிருந்து  பறவைகள் எல்லாம் ஏன்
பறந்து வருகிறது? தெரியுமா?
?
?
?
?
ஏன்?
?
?
?
ஏன்னா நடந்து வந்தா ரொம்ப லேட் ஆகும்.
அதனால்தான்!!
9) ஏண்டி பையன அடிக்குற?
             உங்கள கேவலமாப் பேசுறான்ங்க!
ஆமாமா! அதச் செய்யத்தான் நீ இருக்கியே?!
10) மனைவி: ஏங்க! எங்க அப்பா இன்னைக்கு வர்றதா போன் பண்ணுனாரு!
கணவன்: ஓஹோ..அதான் நேத்து என் கனவுல ஒருப் பிச்சைகாரன் நம்ம வீட்டுக்கு வர்ற மாதிரி கனவு வந்துச்சா?!?
மனைவி: அய்யய்யோ...மாத்தி சொல்லிட்டேன்க...உங்க அப்பாதான் இன்னைக்கு வர்றாரு!
கணவன்: ?!?

Tuesday, August 3, 2010

புத்தகம் வாசிக்கும்/நேசிக்கும் பழக்கம்

இப்பொழுதெல்லாம் நான் பிறந்த நாள், திருமணம் போன்ற விஷேசங்களுக்கு பரிசாக  சுய முன்னேற்ற/சிந்தனை புத்தகத்தை பரிசாக கொடுத்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை  அதிக செலவு செய்து பரிசுப்பொருள் கொடுப்பதை  விட, குறைவான செலவே ஆனாலும் புத்தங்களை பரிசாக கொடுப்பதையே திருப்தியாக நினைக்கிறேன். ஏனெனில் அவர்களின் அடுத்த தலை முறைக்கும் இந்த புத்தகம் இருக்கும், பயனுள்ளதாகவே அமையும். எல்லோரும் கொடுக்கும் கடிகாரங்கள், ஓவியங்கள், சிலைகள், பாத்திரங்கள் போன்றவற்றை நீங்களும் ஏன் பரிசாக கொடுக்க வேண்டும்? அவை எல்லாமே அவர்களிடமே இருக்கும்... புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர் கூட சரி என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என படிக்க நினைப்பார்கள், அப்படியே அவர்களிடம் அந்த படிக்கும் பழக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதல்லாவா? 
 


பெரும்பாலும் யாரும் பாடப் புத்தககளை/வார இதழ்களை  தவிர மருந்துக்கும் கூட வேறு எந்த புத்தகத்தையும் படிப்பதில்லை.  அவர்கள் படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும், இந்த பழக்கம் ஒன்றே நம்மை சிந்திக்க வைக்கும், நமது வாழ்க்கையை ஒரு நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வழியைக் காட்டும். எந்த சிந்தனையும், எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் "வெந்ததைத்  தின்று விதி வரும் போது சாவேனே"  என்று வாழ்வது  ஒரு வாழ்க்கையே இல்லை. பின் ஆறு அறிவு பெற்ற மனித வாழ்க்கைக்கும்ஐந்து அறிவு பெற்ற விலங்கு வாழ்க்கைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

கடமைக்கு படிக்காமல் தினம் 5, 6 பக்கம் படித்தாலும் உணர்ந்து படிக்க வேண்டும்.  படித்ததை, அதில் உள்ள நல்லவற்றை நம் வாழ்வில் முடிந்த வரை கடைப்பிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் கடைப்பிடிக்க முயற்சியாவது செய்ய வேண்டும். சொல்வது எளிது, ஆனால் சொல்லியதை கடைப்பிடிப்பது கடினமே... அதனால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தால் நாளடைவில் அதை கடைப்பிடிப்பது எளிதாகிவிடும்.

நமது பெரும்பாலான ஓய்வு நேரங்களை T.V பார்ப்பதிலேயே செலவழித்து விடுகிறோம். பின் சிந்திக்க என்ன வழி? உலக நடப்புகளை, நல்ல விசயங்களை, தகவல்களை பின் எப்படிதான் தெரிந்து கொள்வது?. ஒரே வழி, Reading habits அதாவது புத்தகம், செய்திதாள்கள்  படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது. நல்ல விசயங்களை, பழக்கங்களை சொல்வதும், செய்வதும், கேட்பதும் இந்தக் காலத்தில் கேலி செய்யப்படுகிறது, வெட்கப்பட வேண்டி இருக்கிறது, கூச்சப் பட வேண்டி இருக்கிறது. ஆனால் பெற்றோர்கள்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் எல்லோர் முன்னிலையிலும் பார்க்க வெட்கப்பட வேண்டிய காட்சிகளை கொஞ்சம் கூட சங்கடமோ, கூச்சமோ இல்லாமல் T.Vயிலும், சினிமாவிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதாவது உண்மையில் எதற்கு வெட்கப்பட வேண்டுமோ அதற்கு வெட்கப்படாமல், நல்லவற்றை செய்வதற்கு வெட்கப்படுகிறோம் என்ன நண்பர்களேநான் சொல்வது சரிதானே?!? அதனால் அந்த கேலிக் கூச்சல்களை கண்டு கொள்ளாமல் நல்லவற்றை கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.

நூறு சதவீதம் யாரும் இங்கே Perfect இல்லை. எல்லோரும் தவறு செய்பவர்களே. இதில் யாரும் விதி விலக்கல்ல.  எல்லோருக்குள்ளும் மனிதமும், மிருகமும் இருக்கிறது. இதில் எதை அதிகமாக வெளியே விடுகிறோம் என்பதில் அடங்கி இருக்கிறது வாழ்க்கையின் சூட்சுமம். நாம் செல்லும் பாதை, செய்யும் செயல், பேசும் பேச்சு எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறதா என்பதை சிந்தனை செய்ய, யோசிக்க புத்தகம் ஒரு வழி காட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே தேவை இல்லை. இதன் மூலமே நாம் நம்முள்ளிருக்கும் மிருகத்தைக் கொன்று, மனிதத்தை  வளர்க்க முடியும்.  இங்கே சொல்வது Bore அடிப்பது போல் இருந்தாலும் சிறிது சிந்தித்து நடந்தால் நம் வாழ்க்கை நலமாகவே/வளமாகவே அமையும் என நான் நம்புகிறேன். நீங்கள் நம்புகிறீர்களா?

சமீப காலங்களில் எல்லா விசேஷங்களிலும் எல்லா நண்பர்களுக்கும் நான் புத்தககங்களையே பரிசாகக் கொடுக்கிறேன். இதையேத்தான் இனியும் செய்யப் போகிறேன். நீங்களும் யாருக்கேனும் பரிசளிக்க விரும்பினால் இதையே செய்யலாம்,_உங்களுக்கும் இது உடன்பாடு எனில்...

இபோது கூட ஈரோடு மாநகரில் ஒரு புத்தக கண்காட்சி 30/07/2010 முதல் 10-08-2010 ஆகிய பனிரெண்டு நாட்களுக்கு நடக்கிறது. வாய்ப்பு உள்ளவர்கள் தவறாமல் சென்று வாருங்கள்.....


வாழ்க வளமுடன்!