Friday, June 26, 2009

ஏர் கண்டிசனர் உபயோகிப்போர் கவனிக்கவும்

இன்றைய காலக்கட்டத்தில் வீடுகளிலும், அலுவலகங்கிலும், காரிலும் ஏர் கண்டிசனர் பயன்பாடு சர்வ சாதாரணமாகி விட்டது. அதே சமயத்தில் இதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகமாகி வருகிறது. எனவே ஏர் கண்டிசனர் உபயோகிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகளை சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்ததை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்.Wednesday, June 24, 2009

உடை மாற்றும் மேஜிக்

இந்த வீடியோவைப் பாருங்கள், எப்படி ஒவ்வொரு நொடிக்கும் ஒரு உடையை மாற்றுகிறார்கள் என்று. நண்பர் அனுப்பியது, இங்கே உங்களின் பார்வைக்காக!

Monday, June 15, 2009

விழித்திடு நுகர்வோரே விழித்திடு

1) சாலையோர சிறு சிறு துணிக் கடைகளில் வண்ண வண்ண ஆடைகளைப் பார்த்திருப்பீர்கள். கும்பல் கும்பலாக மக்கள் பேரம் பேசி வாங்கிக் கொண்டிருப்பார்கள். இந்த வகை ஆடைகளில் ஆபத்து உள்ளதாக ஒரு ஆய்வு சொல்கிறது. பெட்ரோ டெக்ஸ் எனப்படும் வேதிப் பொருள்கள் இதில் கலப்பதாகவும் இதை அணிவதால் புற்று நோய் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் செய்தியை சொல்கிறார்கள். தோல் அரிப்பு, தோல் அலர்ஜி போன்ற பாதிப்புக்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாம். முக்கியமாக ஏழை எளிய பெற்றோர் இந்த மாதிரி கடைகளில்தான் பள்ளி குழந்தைகளுக்கு சீருடை வாங்குகிறார்கள். வசதி உள்ளோர் கூட மலிவு விலையில் கிடைப்பதால் சில சமயங்களில் கைக்குட்டை, துண்டு போன்ற துணிகளை இந்த மாதிரி கடைகளில் வாங்குகிறார்கள். இந்த வகை ஆடைகளில் ஒருவித கெமிக்கல் வாடை வருவதை நீங்களும் உணர்வீர்கள். எனவே, நண்பர்களே, இனி சாலையோர மலிவுவிலை ஆடைகளை வாங்குவதை தவிருங்கள். விழிப்புணர்வோடு இருங்கள். இந்த செய்தி ஒரு தனியார் தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் வந்ததை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.

2) சில மாதங்களுக்கு முன்புதான் எனது நண்பர் ஒருவர் ஒரு பைக் வாங்கினார். இதுவரை இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில்தான் சர்வீஸ் செய்துள்ளார். ஒரு நாள் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது டயர் பஞ்ச்சர் ஆகிவிட்டது. உடனே அருகிலுள்ள கடையில் பஞ்ச்சர் ஒட்ட பைக்கை கொடுத்திருக்கிறார். அப்போது ஏற்கனவே இரண்டு இடத்தில் பஞ்ச்சர் ஒட்டப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இதுவரை நண்பரின் வண்டி பஞ்ச்சர் ஆகவே இல்லை, இப்போதுதான் முதல் முறையாக பஞ்ச்சர் ஆகிவுள்ளது. அந்த மெக்கானிக்கை கேட்ட போது "இதெல்லாம் சர்வ சாதாரணம் சார், அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் உங்களுக்கு தெரிந்த மெக்கானிக்கிற்கு பணம் கொடுத்துவிட்டால் இது மாதிரி நல்ல வண்டியின் சிறு சிறு பாகங்களை மாற்றிக் கொடுத்து விடுவார்கள்!" என்றார். இதை நண்பர் என்னிடம் சொன்னபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு நம்பிக்கையுடன் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் வண்டியை சர்வீஸ்க்காக கொடுக்கிறோம், அங்கேயே இப்படி செய்தால் என்ன செய்வது? எப்படியெல்லாம் யோசித்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்! வண்டியின் உள்ளே இருக்கும் பாகங்களை மாற்றினால் நம்மால் எப்படிக் கண்டுப் பிடிக்கமுடியும்? விழிப்புணர்வுடன் இருப்போம் என்று உங்களை எச்சரிக்கத்தான் முடிகிறது, அதை எப்படி கண்டுபிடிப்பது மற்றும் தடுப்பது என்று தெரியவில்லை.

Thursday, June 11, 2009

சுமை கால் பணம், கூலி முக்கால் பணம்

சுமை கால் பணம், கூலி முக்கால் பணம் என்ற பழமொழியை நீங்கள் எல்லோரும் கேள்விப் பட்டிறுப்பீர்கள். அதே நிலைமைதான் என் நண்பருக்கு ஏற்பட்டுள்ளது. என் நண்பர் வட மாநிலம் ஒன்றில் வங்கிப் பணியில் இருந்து தமிழகத்திற்கு மாறுதல் ஆகி வந்துள்ளார். அவர் அங்கு ஸ்ப்லென்டர்+ பைக் வைத்திருந்தார். வாங்கி ஒரு வருடம்தான் ஆகிறது. வரும்போது அந்த பைக்கையும் எடுத்து வந்து விட்டார். வண்டியை எடுத்து வரும் போது அந்த மாநில RTO அலுவலகத்தில் இருந்து NOC(No Objection Certificate) வாங்கி வந்து விட்டார்.

இங்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் அந்த பைக்கை ரெஜிஸ்தெர் செய்ய வேண்டும். இங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. வண்டி வாங்கி ஒன்றரை வருடத்திற்குள் வேறு மாநிலத்திலிருந்து இங்கு வந்து ரெஜிஸ்தெர் செய்ய வேண்டும் எனில் கமெர்சியல் டேக்ஸ் அலுவலகத்தில் வண்டியின் இன்வாயிஸ் மதிப்பில் 12.5% மற்றும் R.T.O. அலுவலகத்தில் 8% மற்றும் இன்ன பிற செலவுகளும் இருப்பதாக அறிய நேர்ந்தது. அதுவே வண்டி வாங்கி ஒன்றரை வருடத்திற்கு பிறகு
ரெஜிஸ்தெர் செய்ய வேண்டும் எனில் கமெர்சியல் டேக்ஸ் அலுவலகத்தில் 12.5 சதவீதம் செலுத்தத் தேவை இல்லை. R.T.O. அலுவலகத்தில் மட்டும் 8% மற்றும் இன்ன பிற செலவுகள் செய்தால் போதுமானது. இந்த இன்ன பிற செலவுகள் என்பது 200 ருபாய் அலுவலகத்திற்கும் மற்றும் அவரவர் திறமைக்கு ஏற்ப செய்யும் செலவுகள் ஆகும்.

என் நண்பர் வண்டி வாங்கி ஒரு வருடம்தான் ஆகிறது என்பதால் கிட்டத்தட்ட 8-10 ஆயிரம் ருபாய் செலவு ஆகும். இதற்க்கு வண்டியை அங்கேயே விற்று விட்டு வந்திருக்கலாம் என இப்போது எண்ணுகிறார் . இப்போது என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கும் வர முடியாமல் குழப்பமாக இருக்கிறார்.

எனவே, நண்பர்களே! வேறு மாநிலத்தில் இருந்து வண்டியை தமிழ்நாட்டிற்க்கு எடுத்து வரும் முன்பு, நன்கு யோசித்து பின் இங்கு எடுத்து வாருங்கள்! என் நண்பரைப் போல் அவசரப் பட்டு எடுத்து வந்துவிட்டு சிரமப்பட வேண்டாம்.