Monday, June 15, 2009

விழித்திடு நுகர்வோரே விழித்திடு

1) சாலையோர சிறு சிறு துணிக் கடைகளில் வண்ண வண்ண ஆடைகளைப் பார்த்திருப்பீர்கள். கும்பல் கும்பலாக மக்கள் பேரம் பேசி வாங்கிக் கொண்டிருப்பார்கள். இந்த வகை ஆடைகளில் ஆபத்து உள்ளதாக ஒரு ஆய்வு சொல்கிறது. பெட்ரோ டெக்ஸ் எனப்படும் வேதிப் பொருள்கள் இதில் கலப்பதாகவும் இதை அணிவதால் புற்று நோய் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் செய்தியை சொல்கிறார்கள். தோல் அரிப்பு, தோல் அலர்ஜி போன்ற பாதிப்புக்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாம். முக்கியமாக ஏழை எளிய பெற்றோர் இந்த மாதிரி கடைகளில்தான் பள்ளி குழந்தைகளுக்கு சீருடை வாங்குகிறார்கள். வசதி உள்ளோர் கூட மலிவு விலையில் கிடைப்பதால் சில சமயங்களில் கைக்குட்டை, துண்டு போன்ற துணிகளை இந்த மாதிரி கடைகளில் வாங்குகிறார்கள். இந்த வகை ஆடைகளில் ஒருவித கெமிக்கல் வாடை வருவதை நீங்களும் உணர்வீர்கள். எனவே, நண்பர்களே, இனி சாலையோர மலிவுவிலை ஆடைகளை வாங்குவதை தவிருங்கள். விழிப்புணர்வோடு இருங்கள். இந்த செய்தி ஒரு தனியார் தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் வந்ததை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.

2) சில மாதங்களுக்கு முன்புதான் எனது நண்பர் ஒருவர் ஒரு பைக் வாங்கினார். இதுவரை இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில்தான் சர்வீஸ் செய்துள்ளார். ஒரு நாள் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது டயர் பஞ்ச்சர் ஆகிவிட்டது. உடனே அருகிலுள்ள கடையில் பஞ்ச்சர் ஒட்ட பைக்கை கொடுத்திருக்கிறார். அப்போது ஏற்கனவே இரண்டு இடத்தில் பஞ்ச்சர் ஒட்டப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இதுவரை நண்பரின் வண்டி பஞ்ச்சர் ஆகவே இல்லை, இப்போதுதான் முதல் முறையாக பஞ்ச்சர் ஆகிவுள்ளது. அந்த மெக்கானிக்கை கேட்ட போது "இதெல்லாம் சர்வ சாதாரணம் சார், அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் உங்களுக்கு தெரிந்த மெக்கானிக்கிற்கு பணம் கொடுத்துவிட்டால் இது மாதிரி நல்ல வண்டியின் சிறு சிறு பாகங்களை மாற்றிக் கொடுத்து விடுவார்கள்!" என்றார். இதை நண்பர் என்னிடம் சொன்னபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு நம்பிக்கையுடன் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் வண்டியை சர்வீஸ்க்காக கொடுக்கிறோம், அங்கேயே இப்படி செய்தால் என்ன செய்வது? எப்படியெல்லாம் யோசித்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்! வண்டியின் உள்ளே இருக்கும் பாகங்களை மாற்றினால் நம்மால் எப்படிக் கண்டுப் பிடிக்கமுடியும்? விழிப்புணர்வுடன் இருப்போம் என்று உங்களை எச்சரிக்கத்தான் முடிகிறது, அதை எப்படி கண்டுபிடிப்பது மற்றும் தடுப்பது என்று தெரியவில்லை.

No comments: