Friday, December 19, 2008

பிள்ளையார் சுழி.

முரண்பாடுகள்
------------------------
ஆயுள் காப்பீடு
அவசியம் செய்வீர்
விளம்பர பலகை
எழுதி கொண்டிருக்கிறார்
உச்சியில் இருந்தபடி
தனக்கொரு
ஆயுள் காப்பீடு
இல்லாமல்.

இங்கு
சிறுநீர்
கழிக்காதீர்
என்று
எழுதி இருந்த
சுவற்றின் மேலேயே
கழித்து கொண்டிருக்கிறார்
சிறுநீர்.

உன் முகத்தை
தினம்
ஒரு முறையாவது
பார்த்தால்தான்
எனக்கு நிம்மதி.
இது காதலியாய் இருக்கும்போது.
உன் முகத்தை
பார்த்துவிட்டு
போனால்
எதாவது
விளங்குமாடி?
இது அதே காதலி
மனைவியான பின்பு.

ஊழலை
ஒழிப்பதுதான்
எங்கள் ஆட்சியின்
நோக்கம்.
முழங்கி கொண்டிருக்கிறார்
ஒவ்வொரு வோட்டுக்கும்
ஒரு குடம்
கொடுத்துவிட்டு.

வரதச்சனையை
ஒழித்திடுவோம்.
பெண்கள்
நம் நாட்டின்
கண்கள்.
உரையாற்றி கொண்டிருக்கிறார்
தன் மருமகளிடம்
வரதச்சனையாக
வாங்கிய காரில்
வந்திறங்கியவர்.
---------------------------------------------------------

சப்ஜெக்ட்க்கும் இந்த கவிதைக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லையென குழப்பமா? இதுதான் என் முதல் கவிதை முயற்சி. அதனால்தான்.

ஹலோ இது கவிதை என்று நம்பி எழுதி இருக்கிறேன்.வார்த்தையை ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதினால் அது கவிதையாமே!நம்ம பார்த்திபன் கூட ஒரு படத்தில் சொல்லி இருக்காருங்க.அதனாலே நீங்க இதை கவிதை என்று ஒத்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.........

அன்புடன்,
மோகனச்சாரல்

2 comments:

கணேஷ் said...

நல்ல முயற்சி... தொடர்ந்து எழுதுங்கள்.... உங்கள் வலைபூ சிறப்பாக வர வாழ்த்துக்கள்...

Mohan said...

மிக்க நன்றி கணேஷ், தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்!