Thursday, November 5, 2009

மாநில நுகர்வோர் சேவை மையம்

24 மணி நேரமும் செயல்பட கூடிய சேவை மையம் சமீபத்தில் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை நேரடியாக உதவியாளரிடம் பேசலாம். 24 மணி நேரமும் IVRS எனப்படும் சேவை மூலம் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை அறியலாம்.

பொது விநியோகம் சம்பந்தமான மற்றும் நீங்கள் கடைகளில் வாங்கும் பொருட்களில் ஏற்படும் குறைகளுக்கு இந்த சேவை மையத்தை தொலைபேசி, தபால் மற்றும் ஈ-மெய்ல் மூலமாக தொடர்பு கொண்டு தெருவிக்கலாம். மூன்று நாட்களில் பதில் கிடைக்கும் என அரசு சொல்கிறது.

இது சம்பந்தமாக அரசு சார்பில் வெளியான தகவல் அறிய கீழ் காணும் படங்களை க்ளிக் செய்து அறிந்து கொள்ளவும்.




குறிப்பு: இது அரசுக்கான விளம்பரம் அல்ல! நுகர்வோர்க்கான விழிப்புணர்வுக்காக!!

2 comments:

டவுசர் பாண்டி said...

//இது அரசுக்கான விளம்பரம் அல்ல! நுகர்வோர்க்கான விழிப்புணர்வுக்காக!//

சோக்கா கீதுபா !! என்னை மேரி ஆளுங்களுக்கு ரொம்பவே நல்ல மேட்டரு தான் , தலீவா !!

Mohan said...

வாங்க பாண்டி சார்! வருகைக்கு மிகவும் நன்றி!