Wednesday, December 9, 2009

போலியான தகவல்கள் மூலம் வெளிநாடு செல்லாதீர் (50-வது பதிவு)



வருகை புரியும் அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! இது என்னுடைய 50 - வது பதிவு. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வலைப் பக்கத்தை துவக்கினேன். நண்பர் கணேஷ்(http://sellursingam.blogspot.com/) தான் இந்த வலைப் பக்கத்தை துவக்க வழி காட்டினார். இந்த நேரத்தில் அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நண்பர் டவுசர் பாண்டி (http://www.athekangal.blogspot.com/) தான் முதன் முதலில் நண்பராக இந்த வலைப் பதிவின் மூலம் நெருங்கிய நண்பரானார். இது வரை ஒரு முறை கூட அவரை சந்திததில்லை. அவருடைய சென்னை தமிழின் நடையை ரசித்து நண்பரானேன். அவருக்கும் மிக்க நன்றி.

என்னையும் ஒரு பதிவராக ஏற்றுக்கொண்டு பின் தொடர்பவர்களாக இணைத்துக்கொண்ட அனைத்து நல் இதயங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வருகை புரிந்தும், கருத்துக்களை பகிர்ந்துகொண்டும், எனது பதிவுகளுக்கு வாக்களித்து ஊக்கப்படுத்திகொண்டும் இருக்கின்ற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன். உங்களின் ஆதரவுடன் என் வலைப்பயணம் தொடரும் என நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்!

போலியான தகவல்கள் மூலம் வெளிநாடு செல்லாதீர்



படிக்காத பாமரர் முதல் மிகவும் படித்த நபர்கள் வரை வெளி நாட்டில் வேலை பார்க்கும் மோகம் இன்று வரை அதிகமாகத்தான் இருக்கிறது. எத்தனையோ நன்மை தீமைகள் இருக்கிறது என்றாலும், இதில் உள்ள ஆர்வம் பலருக்கும் குறைவதில்லை. இங்கே நாம் அலசப்போவது வெளி நாடுகளுக்கு செல்லுவதை குறை கூற அல்ல, ஆனால் எப்படியாவது வெளி நாட்டில் வேலை கிடைத்து சென்றால் போதும் என்று தவறான தகவல்களை கொடுத்து செல்வதில் உள்ள பாதகத்தை கூறத்தான் இந்தபதிவு.

நீங்கள் எந்த சட்ட மீறல்களையும் செய்யலாம், பிரச்னை வராதவரை. ஆனால் பிரச்னை என்று வந்து விட்டால் அவ்வளுவுதான், நீங்கள் தொலைந்தீர்கள், இதுவரை நீங்கள் செய்துவந்த எல்லா சட்ட மீறல்களும் நோன்டி ஆராயப்பட்டு, வசமாக சிக்கிக்கொல்வீர்கள். உதாரணமாக சமீபத்தில் ஒரு பள்ளி வேன் விபத்துக்குள்ளானபோது, அந்த பள்ளி நிர்வாகத்தால் செய்யப்பட்ட அனைத்து அத்துமீறல்களும் வெளிச்சத்திற்கு வந்தன. அந்த வேன் மட்டும் பிரச்னை இல்லை, அந்த பள்ளி உரிமத்தைக் கூடப் புதுப்பித்துக் கொள்ளவில்லை. அந்த பள்ளி மட்டுமல்ல, பல பள்ளிகளின் வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. யோசித்துப் பாருங்கள், அந்த ஒரு பள்ளியின் வேன் மட்டும் அன்று விபத்திற்குள்ளாகாமல் இருந்திருந்தால், இன்னும் எத்தனை வருடங்களுக்கு இத்தனை சட்ட மீறல்களும் அரங்கேறி கொண்டு இருந்திருக்கும். என்னடா, வெளி நாடு அது இது என்று சொல்லிவிட்டு சம்பந்தம் இல்லாமல் இதை சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று நினைக்காதீர்கள், இருக்கிறது.

இது போலத்தான் நீங்கள் போலியான தகவல் மூலம் வெளிநாடு செல்லும்போதும் ஏற்படுகிறது. எந்த பிரச்னையும் ஏற்படாதாவரை ஒன்றும் இல்லை, ஆனால் பிரச்னை என்று வந்துவிட்டால், பின் மிகப் பெரிய சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும், நீங்கள் மட்டுமல்ல, இங்குள்ள உங்கள் குடும்பமும்.

சமீபத்தில், ஒரு மத்திய இணை அமைச்சர் ஒரு அலுவலக ரீதியான மீட்டிங்கில் கூறியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நம் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். எப்படி? இலங்கை பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி. ஒன்றும் பிரச்சனை இல்லை இதில், அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு இறக்காதவரை. இறந்து விட்டார். என்ன செய்வது? இங்குள்ள அவரின் குடும்பத்தார், அவரின் உடலை இந்தியாவிற்கு எடுத்து வர அரசின் உதவியை நாடி இருக்கிறார்கள். நம் அரசும் உதவ தயாராகி அங்குள்ள இந்திய தூதரகத்தின் மூலம் தொடர்பு கொண்டபோது, அவர்கள் உடலை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள். பின் இலங்கை குடிமகனை (இலங்கை பாஸ்போர்ட்டை பயன்படுத்தியதால்) இந்தியாவிற்கு அனுப்ப எப்படி சம்மதிப்பார்கள்? யோசித்துப் பாருங்கள். இதைப் போல பல இறந்தவர்களின் உடல்கள் அது போன்ற நாடுகளில் உள்ளதாம். அனைத்துக்கும் மூல காரணம், தவறான தகவல்கள் கொடுத்து சென்றதால்.

பின் மிகப் பிரயத்தனமான முயற்சிகளின் மூலம், அந்த நாட்டு அரசு அவரின் உடலை இந்தியாவிற்கு அனுப்ப சம்மதித்தது, ஒரே ஒரு நிபந்தனையுடன். அந்த நிபந்தனைப் படி, இங்குள்ள குடும்பத்தாரின் DNA -வை அனுப்பி, இறந்தவரின் DNA வுடன் ஒப்பிட்டு அது பொருந்திப் போகும் பட்ச்சத்தில், உடலை அனுப்ப சம்மதிக்கும்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், இத்தனை சிரமங்கள் தேவையா என்று. சரியான தகவல் மூலம், வெளி நாடு செல்லும் நபர்கள் பலரே, சிரமத்திற்கு ஆளாவதை செய்தித் தாள்களில் படிக்கிறோம். பின், தவறான தகவல் மூலம் செல்லும் நபர்கள் எத்தனை சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்? இங்கே நான் கூறி இருப்பது ஒரு உதாரணம் தான், இதைப் போல பல சிரமங்களை சந்திக்க நேரிடும், தவறான தகவல்கள் அளிப்பதால். இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மிக கவனமுடன் நூறு சதவீதம் சரியான தகவல்களை அளித்து வெளி நாடு செல்லுங்கள்.

வாழ்க வளமுடன்!

12 comments:

கலையரசன் said...

50க்கு வாழ்த்துக்கள்... இனி 200க்கு, ஸ்டார்ட் மீயூஜிக்!!

sathya said...

மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி.. அரை சதம் எடுத்ததிற்கு வாழ்த்துக்கள்...

sathya said...

மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி.. அரை சதம் எடுத்ததிற்கு வாழ்த்துக்கள்...

Mohan said...

வாங்க கலையரசன்!
வாங்க sakthi!
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

டவுசர் பாண்டி said...

தலீவா !! மொதல்ல வாழ்த்துக்கள் !! உங்களோட வலைப்பயணம் தொடர மன்சார வாழ்த்தறேன் , தல !!

டவுசர் பாண்டி said...

இப்போ !! ஒரு நாள் லேட்டா வந்தததுக்கு மன்னாப்பு கேட்டுக்கறேன்
பா !! அப்பால உங்க 50 -வது பதிவுக்கு இந்த பாண்டியோட விருது !! கோடிங்க காப்பி பண்ணி போடுங்க தல !!

டவுசர் பாண்டி said...

நம்ப தலீவருக்கு ஒரு அன்பு விருது


<img border="0" alt="Photobucket" src="http://i567.photobucket.com/albums/ss112/anandanila/theBestBlogger-1.gif"/>

டவுசர் பாண்டி said...

நம்ப பிளாக்கு பக்கம் இப்ப வந்து பாருங்க தல !!

Mohan said...

// டவுசர் பாண்டி said...
நம்ப தலீவருக்கு ஒரு அன்பு விருது
//
தல! என்னை இன்ப அதிர்ச்சியில தள்ளிட்டீங்க! உங்க விருதுக்கு ரொம்ப நன்றீங்க! என்றும் உங்களின் ஆதரவும் அன்பும் வேண்டுங்க! அன்பை வெளிப்படுத்த எனக்கு வார்த்தை இல்லைங்க! நன்றி தலீவா!!
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

Jaleela Kamal said...

50 வது பதிவு வாழ்த்துக்கள்.

Mohan said...

// Jaleela said...
50 வது பதிவு வாழ்த்துக்கள்.
//
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

மங்களூர் சிவா said...

பயனுள்ள தகவல்

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

SMS collection பதிவுகள் எல்லாம் சூப்பர்!