Wednesday, February 3, 2010

மோகனச்சாரலின் காபி ஷாப் - 03-02 -2010

இன்று முதல் உங்களின் நல் ஆதரவுடன் இந்த காபி ஷாப்'ஐ தொடங்குகிறேன். அவ்வப்போது வந்து காபி அருந்திவிட்டு சிறிது இளைப்பாறி செல்லுங்கள்! உங்களின் ஆசியுடனும், ஆதரவுடனும் கடை களை கட்டும் என்று நம்புகிறேன்!

**************************************************
நம் மகாத்மா காந்தியைப் பற்றி ஒரு சுவாரசியமான தகவலை சமீபத்தில் அறிந்தேன். ஆங்கிலேயர்களின் துப்பாக்கி, தோட்டாக்கள், பீரங்கிகள் என அனைத்திற்கும் பயப்படாமல் இருந்தவருக்கு ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டும் மிகவும் பயந்திருக்கிறார். ஆமாங்க... அவருக்கு இருட்டு என்றால் மிகவும் பயமாம். இரவில் தூங்கும் பொது கூட விளக்கை போட்டு கொண்டுதான் தூங்குவாராம். ஆச்சரியமாக இருக்குதானே?....
**************************************************

**************************************************
இந்த பிப்ரவரி 2010 மாதத்துல ஒரு விசேஷங்க... கொஞ்சம் காலேண்டர பாருங்களேன்... இப்ப எதாவது புலப்பட்டதா?.... நல்லாப் பாருங்க... ஆமாங்க... ஒவ்வொரு கிழமையும் சரியாக நான்கு நான்கு தேதிகளில் வரும். இப்ப மறுபடியும் மாத காலேண்டர பாருங்க... என்ன சரிதானே?..... லீப் வருடங்கள் தவிர மற்ற வருடங்களில் இது மாதிரி வரும்....
*************************************************

************************************************
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து 400 ரூபாய் ஆதரவற்ற விதவைகளுக்கும், முதியோர்களுக்கும் மாதம் தோறும் வழங்கி வருகிறது. இவை அனைத்தும் மணி ஆர்டர் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. நல்ல விசயம்தானே... என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் இந்த போஸ்ட்மென் என்ன செய்கிறார் என்றால் 400 ரூபாயில் 40 ரூபாய் எடுத்துக்கொண்டு 360 ரூபாய்தான் கொடுக்கிறார். அதாவது 10 % கமிஷன். ஏற்கனவே தபால் துறைக்கு அரசு மூலம் கமிஷன் செலுத்தப்பட்டு விடுகிறது. ஆதரவற்ற விதவை, முதியோரிடம் இருந்து ஈவு, இரக்கம் இல்லாமல் பிச்சை எடுக்கும் இந்த ஜென்மங்களை என்னவென்று சொல்வது?....
************************************************

**************************************************
சாதரணமாக விண்டோஸ் மெசினில், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கோப்புகளை செலக்ட் செய்து, ரைட் கிளிக் செய்து ப்ரோபெர்ட்டிஸ் சென்று பார்த்தால் அந்த கோப்புகள் அல்லது போல்டர்களின் அளவு மற்ற பிற விசயங்களை தெரிந்து கொள்ளலாம், இதில் ஒரே ஒரு விண்டோஸ் மட்டுமே ஓபன் ஆகும். இதுவே கன்ட்ரோல் பேனல் உள்ளவற்றில் உதாரணமாக பான்ட்ஸ் (Fonts ) சென்று நீங்கள் இது மாதிரி ஒன்றுக்கும் மேற்ப்பட்டவற்றை செலக்ட் செய்து, ரைட் கிளிக் செய்து ப்ரோபெர்ட்டிஸ் சென்று பார்த்தால் நீங்கள் எத்தனை கோப்புகளை செலக்ட் செய்து இருக்கிறீர்களோ அத்தனை விண்டோஸ் ஓபன் ஆகி விடும். உதாரணமாக உங்கள் Fonts போல்டரில் 100 fonts இருந்து நீங்கள் எல்லாவற்றையும் செலக்ட் செய்து ப்ரோபெர்ட்டிஸ் கிளிக் செய்து விடாதீர்கள், ஏனெனில் 100 விண்டோஸ் ஓபன் ஆகி விடும்.
******************************************************

******************************************************
நகைச்சுவை.....
வடிவேல்: என்ன இது 601 ரூபாய் கடன் வாங்கிவிட்டு வெறும் 106 ரூபாய் மட்டும் தருகிறாய்?
பார்த்திபன்: இதுதான் வாங்கிய கடனை திருப்பி தருவது என்பது....
வடிவேல்: ?!?....
----------
LKG பையன்-1: டேய் மச்சான்... எக்ஸாம்'க்கு பிட் எடுத்துட்டுப் போனியே...என்னாச்சு?
LKG பையன்-2: அத ஏன்டா கேக்குற... பிட்'ஐ ஜட்டிக்குள்ள வச்சுட்டுப் போனேன். வழக்கம் போல ஜட்டியிலேயே உச்சாப் போயிட்டேன்............
*******************************************************

6 comments:

டவுசர் பாண்டி said...

//ஒவ்வொரு கிழமையும் சரியாக நான்கு நான்கு தேதிகளில் வரும்.//

தலீவா !! காப்பி ஷாப்பு இன்னு பேரு வெச்சது சொம்மா தூளு டக்கரா கீது , ஆனா ஒன்னு இன்னா கெழமை நாலு தேதில வருது பிரியலயே ?

Mohan said...

// டவுசர் பாண்டி said...
தலீவா !! காப்பி ஷாப்பு இன்னு பேரு வெச்சது சொம்மா தூளு டக்கரா கீது , ஆனா ஒன்னு இன்னா கெழமை நாலு தேதில வருது பிரியலயே ?
//


வாங்க தல! வருகைக்கு நன்றி!
ஞாயிறு: 7, 14, 21, 28
திங்கள்: 1, 8, 15, 22
செவ்வாய்: 2, 9, 16, 23
........
இது மாதிரி ஒவ்வொரு கிழமையிலும் சரியாக நான்கு தேதிகள் வரும்....
இப்பப் புரியுதா தல.?

sivaraman said...

Leap Year தவிர அனைத்து பிப்ரவரி மாதங்களிலும் நீங்கள் குறிப்பிட்டபடி வரும்.

Mohan said...

// sivaraman said...
Leap Year தவிர அனைத்து பிப்ரவரி மாதங்களிலும் நீங்கள் குறிப்பிட்டபடி வரும்.
//

வாங்க சிவராமன்!
மிகவும் நன்றி.... சரி செய்துவிட்டேன்...
தொடர்ந்து வருகை புரியுங்கள்....

மதி சூடி said...

Congrats! All r good

Mohan said...

வாங்க மதி சூடி!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் மிகவும் நன்றி!