Monday, March 1, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 01-03-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.
/


1) கல்யாணிக்கு, கல்யாணம் பண்ண கல்யாணி அப்பா கல்யாண சுந்தரம் கல்யாணிக்கு கல்யாணம் என்ற மாப்பிளைய கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினார். கல்யாணிக்கு கல்யாணம் புடிக்காம கல்யாணம் வேணாம்னு சொல்ல, கல்யாணி கல்யாணத்தைப் புடிக்காமத்தான் கல்யாணம் வேணாம்னு சொல்றலோன்னு கல்யாணி கல்யாணத்துக்கு கல்யாணம் வேணாம்னு கல்யாணராமன் என்ற மாப்பிளையை பார்க்க, கல்யாணி கல்யாணமே வேணாம்னு கல்யாணராமன்ட்ட சொல்ல, கல்யாணி அப்பா கல்யாணி கல்யாணத்த எப்படி நடத்துவாரு? யோசிங்க!.....

2) நாஸா ஐஸ்’ம், தண்ணீரும் நிலாவுல கண்டுப் பிடித்துருக்காங்க, நாம சரக்கும், முறுக்கும் கொண்டு போனா மட்டும் போதும்!!


3) சும்மா இருக்குறவன் சும்மா இல்லாம சும்மா இருக்குறவனுக்கு சும்மா சும்மா மெசேஜ் அனுப்பி வச்சா சும்மா இருக்குறவுங்க சும்மா சும்மா மெசேஜ் அனுப்புறவங்கள சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன். இப்போ நீங்க சும்மா இருந்தா சும்மா இருக்குறவங்களுக்கு இந்த மெசேஜ்’ஐ சும்மா போர்வேர்டு பண்ணுங்க. இல்லன்னா சும்மா இருங்க. -----
BY
சும்மா இருக்க முடியாம சும்மா இருப்பவர்களுக்கு சும்மா மெசேஜ் அனுப்புவோர் சங்கம்.

4) ஒரு சர்வே:-
500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்?
எழுத்தாளர்: ஒரு வாரம்.
டாக்டர்: இரண்டு வாரம்.
வக்கீல்: ஒரு மாதம்.
ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர்(?) என்பது!!

5) வாழ்க்கை என்பது
மொட்டுக்கள் நிரம்பிய
மலர்களின் தோட்டம்!
நீ சிரிக்கும்போது
மட்டுமே அதில்
பூக்கள் பூக்கிறது!!

6) பல நூறு வருடம் ஆகும் ஒரு வைரம் உருவாக!
அப்படி இருக்க நீ மட்டும் எப்படி பத்து மாதத்தில்?
?
?
?
?
?
?
ஹலோ! ஹலோ! கண்ட்ரோல் யூவர்செல்ப்!!
ப்ரீ மெசேஜ்’னா இப்படி காமெடியா வரத்தான் செய்யும்.....

7) அப்பா: ஏன்டா நேத்து குடிச்சுட்டு விழுந்து கிடந்த?
மகன்: எல்லாம் கெட்ட சகவாசம்தான்பா! 6 பீர் 6 பேர். அதுல 5 பேர் குடிக்கல! இந்த மாதிரி ப்ரண்ட்ஸ் இருந்தா இப்படித்தான் ஆகும்பா!!

8) ஒரு அழகான கவிதை:-
காற்றே!
நீயும் எங்களைப்
போலத்தானா?
படிக்காமலே
பக்கத்தைப்
புரட்டுகிறாயே?!?
--- கடைசி பெஞ்ச் ஸ்டுடன்ட்ஸ் சங்கம்...

9) குங்குமம் இந்த வாரம்....
?
?
?
?
?
?
?
?
சந்தனம் அடுத்த வாரம்.
விபூதி அதுக்கு அடுத்த வாரம்.
---- கோவில் வாசலில் உருண்டு புரண்டு யோசிப்போர் சங்கம்.

10) LKG Boy- 1: மாப்ள! எக்ஸாம்’ல எதுவும் தெரியாததால எதுவும் எழுதாம வெறும் பேப்பரை கொடுத்துட்டு வந்துட்டேன்டா!
LKG Boy – 2: நானும்தாண்டா... வெறும் பேப்பரைக் கொடுத்தேன்!
LKG Boy – 1: அட முட்டாப் பயலே! ஏன்டா அப்டி பண்ணுன? டீச்சர் நம்மள காப்பி அடிச்சதா நினைச்சுட மாட்டாங்க?


11) இனிப்பான முத்தம்? --- தலையில்.
அன்பான முத்தம்? --- கன்னத்தில்.
ரொமாண்டிக்கான முத்தம்? --- உதட்டில்.
சூடான முத்தம்?
?
?
?
பைக் சைலன்சர்ல வாயை வச்சுப்பாருங்க.... தெரியும்.

12) தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்...
உங்ககிட்ட கேக்கணும் போல தோனுச்சு...
நேற்று ஒரு அழகான பொண்ணு என்கிட்டே
I LOVE YOU என்று சொன்னா..அப்படினா என்னா?
ஏதும் புக் பேரா?
---- பச்சபுள்ள சங்கம்....

13) நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?
நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு!

14) நம்ம அய்யாசாமி ஏர்போர்ட்க்கு போன் செய்கிறார்....
“ஏங்க மும்பை டு லண்டன் எவ்வளவு நேரம் ஆகும்?”
ரிசப்னிஸ்டு: ப்ளீஸ் ஒன் செகண்ட் சார்...
அய்யாசாமி: அட ங்கொக்க மக்க என்னா ஸ்பீடு....

15) நண்பர் – 1: ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நீ
எப்ப உணர்ந்த?
நண்பர் – 2: நான் ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கிட்ட பிறகுதான்.....

16) அழகான பெண்களுக்கு 4 விஷயங்கள் பிடிக்கும்...
1. செல்போன்
2. ஸ்கூட்டி
3. பணம்
4. “மோகன்”
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்...
அதனால நீங்க கடுப்பாகதீங்க.......

17) அய்யாசாமி: ஹலோ யார் பேசுறது?
பெண்: நான் செல்லம்மா பேசுறேன்...
அய்யாசாமி: நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்?
யாருன்னு சொல்லுமா!
பெண்: ?!?

18) அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா?
அம்மா: ?!?

19) ஹாய்! என் நியூ நம்பர் 94xxxxxxx5.... please save it....
?
?
?
?
?
?
?
?
அப்புறம் ஒரு விஷயம்... என்னோட பழைய நம்பரும் அதுதான்...
என்ன பண்றது? லொள்ளு என் கூட பிறந்தது... மெசேஜ் வேற ப்ரீயா... அதனாலதான்...

20) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...
/
/கலக்கல் தொடரும்...
/
/

10 comments:

Balamurugan said...

ஒன்னு ரெண்டு ஏற்கனவே எங்கயோ படிச்சமாதிரி இருந்துச்சு. ஆனாலும் படிக்க ஆரம்பிச்சவுடன காட்ட ஆரம்பிச்ச பல்ல கடைசிவரைக்கும் மூட முடியல.

முடிஞ்சா அப்படியே இங்கயும் வந்துட்டுப் போங்க
http://ekanthabhoomi.blogspot.com/2010/02/blog-post_22.html

Mohan said...

வாங்க Balamurugan! தங்கள் வருகைக்கு நன்றி!
இதோ வருகிறேன்.....

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த முத்த சோக்கு.........ஹா...........ஹா.........

Babou said...

ரொம்ப சூப்பர்.. முதலாவது நம்ம விசு சார் சொன்னது போலவே.. பலே.. டேட்ட தப்பா போட்டிருக்கிறீங்கன்னு நெனைக்கிறேன். 01-03-2009 ன்னு இருக்கு.

வேலன். said...

ஆமா...நீங்க மட்டும் எங்கிருந்து பிடிக்கிறீங்க எஸ்.எம்.எஸ்.கலாட்டக்களை..
அனைத்தூம் அருமை..வாழ்க வளமுடன்,வேலன்.

Mohan said...

வாங்க சைவகொத்துப்பரோட்டா!
வாங்க Babou!
வாங்க வேலன்!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
Babou! நீங்கள் சொல்வது சரி...தேதியை தவறாக போட்டுவிட்டேன். இப்போது சரி செய்து விட்டேன்...
மிக்க நன்றி!!

*இயற்கை ராஜி* said...

:-) nice

டக்கால்டி said...

நல்லாருக்குங்க

Mohan said...

வாங்க இயற்கை!
வாங்க டக்கால்ட்டி!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி!

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு