Monday, March 15, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 15-03-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.

1) மாணவர்களின் வளர்ச்சி... ஒரு பார்வை....
1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...
4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...
7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...
10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?
UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?
PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல.....

2) I
I L
I LO
I LOV
I LOVE
I LOVE Y
I LOVE YO
I LOVE YOGA
இது உடம்புக்கு நல்லது.... நீயும் ட்ரை பண்ணிப் பாரு.. ஓகே.வா...

3) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?
ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...

4) உன் புத்தகத்தின்
முதல் பக்கத்தில்
ஒரு கவிதைப்
பார்த்தேன்...
பிறகுதான் சொன்னார்கள்
அது
உன் பெயர் என்று...
---- மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்.

5) ஏப்ரல் முதல் தேதி அன்று அய்யாசாமி ஒரு பஸ்ஸில் ஏறினார். கண்டக்டர் டிக்கெட் வாங்க சொல்ல, பத்து ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினார்...
பின் கண்டக்டரைப் பார்த்து சத்தமாக “ ஹே ஏப்ரல் பூல்! என்னிடம் பஸ் பாஸ் இருக்கே!?” என்றார்..

6) கேர்ள்: டேய்.. எனக்கு எந்த மெசேஜ்’ம் போர்வர்ட் செய்யாதே...
பாய்: சாரி... உன் நம்பர என்னோட ப்ரண்ட்ஸ் லிஸ்ட்’ல சேர்த்துட்டேன்.. தப்பா எடுத்துக்காதே...
கொஞ்ச நாள் கழித்து.....
கேர்ள்: ஐ லவ் யு...
பாய்: வாட்?....
கேர்ள்: சாரி...உன் நம்பர என்னோட லவ்வர் லிஸ்ட்’ல சேர்த்துட்டேன்.. தப்பா எடுத்துக்காதே...
பாய்: ?!?

7) பெண் – 1: அக்கா இன்னைக்கு என் புருஷன் ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு படுங்களேன்...
பெண் – 2: அடிப் போடி...உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேல இல்ல! யார் ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிடுறீங்க!!

8) வாழ்க்கை நமக்கு எவ்வளவோ பாடங்கள் கற்று தருகிறது.. ஒரு புகழ்வாய்ந்த சீன கவிஞர் சொல்கிறார்...” சிங்க்லியோ சுவா சொன்கலோமா ச்யோன சுங் உணா செவோல்”
உண்மையிலேயே மனசை தொடும் வரிகள்தானே!...
நான் இதை படித்துவிட்டு அழுதே விட்டேன்!.....

9) ஆசிரியர்: போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா!
கொஞ்ச நேரம் கழித்து மாணவன் வெறும் கையுடன் வருகிறான்...
மாணவன்: சார்..
சிட்டிபஸ்..
ஏர்பஸ்...
டவுன்பஸ்...
எக்ஸ்பிரஸ் பஸ்...
பாயிண்ட்-பாயிண்ட் பஸ்....
டீலக்ஸ்பஸ்....
ஏசிபஸ்....
இப்படி எல்லா பஸ்சும் இருக்கு...
ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் கிடைக்கவே இல்ல!
பஸ் டெபோவிலேயே கேட்டுட்டேன்!


10) வேடிக்கையான ஆனால் உண்மையான ஒன்று.....
உலகத்திலேயே மிகவும் நீளமான 5 நிமிடம்...
“கிளாஸ்’ல பீரியட் முடியப்போற கடைசி 5 நிமிடம்..”
உலகத்திலேயே மிகவும் குறைவான 5 நிமிடம்...
“எக்ஸாம் எழுதிகிட்டு இருக்குறப்ப கடைசி அந்த 5 நிமிடம்”...

11) கேர்ள்: அன்பே! உன்னை கடைசி வரைக்கும் கைவிட மாட்டேன்!
பையன்: உங்க வீட்ல யாரையுமே நான் நம்ப மாட்டேன்!
கேர்ள்: ஏன்?
பையன்: உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா!

12) பிப்ரவரி – 14 --- காதலர் தினம்...
நவம்பர் – 14 --- குழந்தைகள் தினம்...
நீதி: மனிதன் எதை செய்தாலும் ஒரு காரணமாகவே செய்வான்.

13) பையன்: உனக்கு வயசு என்ன ஆவுது?
கேர்ள்: ஆடி வந்தா 18.
பையன்: அப்ப நடந்து வந்தா?...???

14) முதல் பெஞ்ச்ல இருப்பவனுக்கு பிரச்சனைய எப்படி தவிர்ப்பது என்றுதான் தெரியும்... ஆனா கடைசி பெஞ்ச்ல இருப்பவனுக்குதான் எப்படி பிரச்சனையே எதிர்கொள்வது என்பது தெரியும்...
--- MBBS (Member of Back Bench Students)

15) லேடி: சார்...நான் மாசமா இருக்கேன்...
மேனேஜர்: அதுக்கு என்ன?
லேடி: நீங்கதானே மாசமானா சம்பளம் தருவேன்னு சொன்னீங்க....
மேனேஜர்: ?!?....

16) எங்க தெரு நாய்க்கிட்ட ஜூலின்னு சொன்னா வால ஆட்டுது... ஜிம்மின்னு சொன்னா தலைய ஆட்டுது.... ஆனா உங்க பேர சொன்னா மட்டும் வெக்கப் படுது...
இதெல்லாம் நல்லா இல்ல... சொல்லிட்டேன் ஆமா....

17) லவ்வை தவிர நமக்கு வலியான நிமிடங்கள் என்பது... எக்ஸாம் எழுதி விட்டு நண்பனுக்காக காத்திருக்கும் அந்த நிமிடங்கள்... இப்படி யோசித்துக்கொண்டு... “ங்கொய்யால ஒரு வேல பாஸ் ஆயிடுவானோ!?!”....

18) “படிக்காதவனா” இருந்தா தமன்னா மாதிரி ஒரு பிகர் செட் ஆகும்....
அரியர் வச்சா சமீரா ரெட்டி மாதிரி ஒன்னு பிக்கப் ஆகும்...
நல்லாப் படிச்சா மவனே “காதல் கொண்டேன்” தனுஷ் நிலைமை தான்... இப்ப தெரியுதா? நாங்களெல்லாம் ஏன் படிக்காம அரியரோட இருக்கோம்ன்னு......

19) நான் உங்க லவ்வர பஸ் ஸ்டாண்ட்’ல பார்த்தேன்...
அவ என் பக்கத்துல வந்தா...
ரொம்ப பக்கத்துல வந்தா....
வந்து எங்கிட்ட ஒன்னு சொன்னா...
“கொஞ்சம் ஓரமா போங்க...குப்பை அள்ளனும்னு”
ஆமாம்.......சொல்லவே இல்ல!!!!!!!!!!!

20) ஒரு ஏழைப் பையனின் கவிதை...
எதிர் வீட்டு
ஜன்னலைப்
பார்த்தேன்..
நிறைய சட்டைகள்.....
என்
சட்டையைப்
பார்த்தேன்...
நிறைய
ஜன்னல்கள்....
/
/கலக்கல் தொடரும்.
/

9 comments:

மணிஜி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Sen22 said...

superruuuu...

Mohan said...

எல்லாமே நல்லா இருந்ததுங்க!

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த பெயரே கவிதை ஆன மேட்டர் ஓ.கே.

pichaikaaran said...

parthen..rasithen

க ரா said...

நல்லா இருக்குது எல்லாம். அந்த கவிதை சூப்பர்.

சென்ஷி said...

:)

அருமை

vjvrk said...

” சிங்க்லியோ சுவா சொன்கலோமா ச்யோன சுங் உணா செவோல்" பயங்கற தத்துவம்

Mohan said...

வாங்க தண்டோரா!
வாங்க Sen22!
வாங்க Mohan!
வாங்க சைவகொத்துப்பரோட்டா!
வாங்க பிச்சைக்காரன்!
வாங்க இராமசாமி கண்ணண்!
வாங்க சென்ஷி!
வாங்க vjvrk!

தங்களின் வருகைக்கும், ரசிப்புக்கும், பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
தொடர்ந்து வருகை புரியுங்கள்!!