Wednesday, May 6, 2009

கண்ணில் தூசி விழுந்துவிட்டால்....

நான் பெரும்பாலும் பைக்கில் செல்லும்போது கண்ணாடி அணிந்து கொள்வேன். கண்ணாடி நம்மை வெயிலில் இருந்தும், கண்ணில் தூசி விழுவதில் இருந்தும் காப்பாற்றும். அதுவும் மாலை நேரங்களில் செல்லும்போது சிறு சிறு பூச்சிகள் கண்ணில் விழும், எனவே இந்த மாதிரி சமயங்களில் கண்ணாடி அணிவது முக்கியம்.

நான் சென்ற வாரத்தில் பைக்கில் செல்லும்போது எதோ ஒரு சிறு தூசி கண்ணில் விழுந்து விட்டது, கண்ணாடி அணிந்து சென்றும் கூட. வீட்டுக்கு வந்து நல்ல தண்ணீரில் கண்ணை கழுவியும் கூட உறுத்தல் நிற்கவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் தூசியை நீக்க முடியவில்லை, தூசியை கண்டு பிடிக்கவும் முடியவில்லை. ஆனால் உறுத்தல் மட்டும் போகவில்லை.

நான் பயந்து விட்டேன். சரி.. மெடிகல் சென்று எதாவது ட்ராப்ஸ் வாங்கி விடலாம் அப்படியும் சரியாகவில்லை என்றால் டாக்டரிடம் செல்லலாம் என்ற முடிவோடு மெடிக்கல் சென்றேன். நடந்ததை சொல்லி ட்ராப்ஸ் கேட்டேன்.

அங்கு இருந்தவர் ட்ராப்ஸ் போடுவதற்கு முன்பு கீழே குனிந்து கொண்டு இமையைப்(முடிப் பகுதியை) பிடித்துக்கொண்டு மிகவும் மெதுவாக மேலும் கீழும் அசைக்க சொன்னார். அது போலவே செய்தேன். என்ன ஆச்சரியம். உடனே உறுத்தல் நின்று விட்டது. எனக்கு மிகப் பெரிய ரிலிப் ஆகிவிட்டது. ட்ராப்ஸ் தேவை இல்லாமல் போய்விட்டது. மேலே தூசி இருந்தால் மேல் இமையையும், கீழ் பகுதியில் தூசி இருந்தால் கீழ் இமையையும் பிடித்துக் கொண்டு அசைக்க வேண்டும். கண்டிப்பாக நிவாரணம் கிடைக்கும். ஆனால் எந்த காரணம் கொண்டும் கண்ணை கசக்க கூடாது. இந்த விசயத்தை எல்லா நண்பரிடமும் கூறுங்கள் என்று அவர் சொன்னார். இதோ இந்த பதிவின் மூலம் தெரிந்த தெரியாத அனைத்து நண்பர்களிடமும் தெரிவித்து விட்டேன். எதோ என்னால் முடிந்தது.

ஒவ்வொரு திங்கள் கிழமையும் கொடைக்கானல் FM ல் காலை 6.30 - 6.45 , 15- நிமிடங்களுக்கு கண் பாதுகாப்பு பற்றி ஒலி பரப்பு செய்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் கேட்கவும்.

அப்புறம் ஒரு சின்ன உதவி. எனக்கு தமிழ் டைப் தெரியாததால் கூகிள் மூலமே டைப் செய்து பதிவிடுகிறேன். ஆனால் பெரும்பாலான சமயங்களில் இந்த கூகிள் வேலை செய்வதில்லை. எனவே இது மாதிரி எதாவது மாற்று வழி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

10 comments:

ALIF AHAMED said...

http://tamil99.org/tamil99-software/


go and download

more

http://tamil99.org/

சுந்தர் said...

மிக,மிக பயனுள்ள குறிப்பு, நன்றி

வான்முகிலன் said...

வணக்கம்.
நீங்கள் NHMWriter.exe என்ற சாப்ட்வேரை கூகிளில் சென்று தயவுசெய்து தேடிப் பெற்றுக்கொள்ளவும். உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனுடன் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறை விளக்கப் புத்தகத்தைப் படித்து அதன் பயன்பாடு எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளவும்.

செந்தில்குமார் said...

பயனுள்ள தகவல்.. நன்றி !

Mehala said...

Very nice tips..Thank you

Mohan said...

வாங்க மின்னுது மின்னல்!
வாங்க வான்முகிலன்!
தங்களின் தகவல் உதவிக்கு மிக்க நன்றி! முயற்சி செய்து பார்க்கிறேன்!

Mohan said...

வாங்க sundar!
வாங்க செந்தில்குமார்!
வாங்க Mehala!
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

யூர்கன் க்ருகியர் said...

thanks!

Kumaran said...

NHM Writer is best.

Mohan said...

வாங்க ஜுர்கேன் க்ருகேர்..... !
வாங்க Kumaran!
தங்கள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி!