Monday, August 10, 2009

சர்க்கரை நோய்(நீரிழிவு) - அறிந்துகொள்ள வேண்டியது

முன்னொரு காலத்தில் சர்க்கரை நோய் என்பது வயதான பணக்காரர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய் என இருந்தோம். ஆனால் தற்போது சர்வ சாதாரணமாக ஏழை, செல்வந்தர், இளவயது, முதுவயது என எல்லா தரப்பினரையும் இது பாதிக்கிறது என்பது உண்மை.

அதுமட்டுமல்ல. இன்னும் சில வருடங்களில் உலகிலேயே அதிக அளவாக இந்தியாவில் சுமார் 7 கோடி பேருக்கு இந்நோய் இருக்கும் என்றும், அதற்க்கு அடுத்தப் படியாக சீனாவில் 6 கோடி பேருக்கு இந்நோய் இருக்கும் என்றும் ஒரு சமிபத்திய ஆய்வு சொல்கிறது. இன்னும் சொல்லப் போனால் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளையும் இந்த அரக்கன் விட்டு வைப்பதில்லை என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்தி.

நம் உடலில் நமக்குத் தெரியாமலேயே அமைதியாக இருந்து நம் உடலை பாதிக்கும் ஆற்றல் பெற்றது நீரிழிவு நோய்.

எனவே நீரிழவு நோய்ப் பற்றி இங்கே நான் படித்து தொகுத்தவற்றை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சர்க்கரை நோய் என்றால் என்ன?
கணையத்தில் இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபோது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிப் போவதையே சர்க்கரை நோய் என்கிறோம்.

அறிகுறிகள்:
உடலில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாமல் அமைதியாக இருந்து கொல்லும் நோய் இது. நீங்கள் ஏதேனும் ஒரு உபாதைக்கு டாக்டரிடம் செல்லும்போதுதான் உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவரும். அதிகமான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகமான பசி எடுத்தல், எடை குறைதல் மற்றும் பாதகங்கள் மரத்து போதல் போன்றவற்றை அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம்.

பரம்பரை நோயா?
ஆம். இது ஒரு பரம்பரை நோய் என்பதால், பெற்றோருக்கு இருக்கும் பட்சத்தில், ஒருவர் தனது 25 வயதுக்கு மேல் அறிகுறி இல்லாவிட்டாலும் நீரிழிவு உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

இரத்தத்தில் சர்கரையின் அளவு:

சாதரண அளவு:
சாப்பிடுவதற்கு முன்பு: 80 - 120 மில்லி கிராம்.
சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து: 120 - 160 மில்லி கிராம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு:
சாப்பிடுவதற்கு முன்பு: 130 மில்லி கிராமுக்கு கீழ்.
சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து: 180 மில்லி கிராமுக்கு கீழ்.


பாதிக்கப்படும் உறுப்புகள்:
தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளும். குறிப்பாக இதயம், சிறுநீரகங்கள், கால் போன்ற உறுப்புகள். எனவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திறுப்பது மிக மிக மிக முக்கியம்....

இரண்டு வகையான சர்க்கரை நோய்:
1. I.D.D.M (Insulin-dependent diabetes mellitus) டைப் 1 சர்க்கரை நோய்:
கணையத்தில் இன்சுலின் கொஞ்சம் கூட சுரக்காமல் இருக்கும் நிலையில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும். இந்த வகையை சேர்ந்தவர்களுக்கு வாழ் நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட்டுகொண்டிருக்கவேண்டும். பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் இந்த "டைப் 1 சர்க்கரை நோய்" வருகிறது.


2. N.I.D.D.M (Non-Insulin-Dependent Diabetes Mellitus) டைப் 2 சர்க்கரை நோய்:
கணையத்தில் இன்சுலின் முழுமையாக இல்லாமல் குறைவாக சுரந்தாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும். இவர்களுக்கு இன்சுலின் ஊசி தேவைபடாது. தினமும் மருந்து, மாத்திரை எடுதுக்கொள்வதின் மூலமே சர்க்கரையின் அளவை கட்டுப் படுத்த முடியும். இதை "டைப் 2 சர்க்கரை நோய்" என்பர்.

தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வழிகள்:
1. கட்டுப்பாடான உணவுப்பழக்கம்.
2. இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான இடைவெளிகளில் பரிசோதித்துக் கட்டுக்குள் வைத்திருத்தல்.
3. உடற்பருமனை தவிர்த்தல்.
4. தினமும் உடற்பயிற்சி.
5. தினமும் நடைப்பயிற்சி.
6. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை 200 மில்லி கிராமிர்க்குள் வைத்திருத்தல்.
7. மன அழுத்தம், அதிகமான கவலை இல்லாமல் மனதை ரிலாக்ஷாக வைத்துக்கொள்ளுதல்.

சர்க்கரை நோயாளிகள் சேர்த்துகொள்ளவேன்டியது:
வெண்ணெய் எடுத்த மோர்
முருங்கைக்காய்
வெந்தயம்
கடுகு
தக்காளி ஜூஸ்
பூண்டு
பச்சை காய்கறிகள்
வேள்ளெறிப் பிஞ்சு
மக்காச்சோளம்
சோளப்பொறி
முட்டைகோஸ்
கொய்யாப்பழம்
பப்பாளிப்பழம்
கொத்தமல்லி
பாகற்காய்
மிளகு
வாழைத்தண்டு
கீரை வகைகள்
பயறு வகைகள்
எலுமிச்சை
வடிகட்டிய சூப்
மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள்...

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேன்டியது:
சர்க்கரை சேர்த்த காபி, தேநீர், பால்.
சர்க்கரை
க்ளுகோஸ்
ஐஸ்க்ரீம்
மதுபானங்கள் மற்றும் புகையிலை
கேக்
தேன்
ஜெல்லி
கல்கண்டு
கிழங்கு வகைகள்
இனிப்புப் பண்டங்கள் அல்வா, புர்பிய், புட்டு, ஜாம்
பாலாடைகட்டி
வெல்லம்
சாக்லேட்
வாழைப்பழம்
பலாப்பழம்
மாம்பழம்

கீழ் கண்டுள்ள நிலைபாடுகளின் மூலம் நீரிழிவு கட்டுப்பாடிற்குள் இருப்பதை உறுதி செய்யலாம்:

1. நீரிழிவின் அறிகுறிகள் இல்லாதிருத்தல்.
2. உடல் எடை சீராக இருத்தல்.
3. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 - 100 மில்லி கிராமிர்க்குள் இருத்தல்.
4. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு 200 மில்லி கிராமிர்க்குக் கீழாகவும், டிரை கிளிசரைடு 140 மில்லி கிராமிற்கு குறைவாகவும் இருத்தல்.
5. சிறுநீரில் சர்க்கரை இல்லாதிருத்தல்.முடிந்தவரை இயற்கையுடன் இசைந்து வாழ்தலே இதுபோன்ற நோய்களை தவிர்க்க சிறந்த வழியாகும்.

7 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Pavithra said...

Wow thats really informative site.. keep going will be following from now..

Mohan said...

வாங்க Pavithra!
தங்கள் வருகைக்கு நன்றி!

Jaleela said...

சர்க்கரை வியாதிக்கு அருமையான தகவல்

Mohan said...

வாங்க Jaleela!
தங்கள் வருகைக்கு நன்றி!

TAI CHI said...

சர்க்கரை வியாதிக்கு அருமையான தகவல்
visit http://taichi-india.blogspot.com

Varadaradjalou .P said...

நான் ஒரு டைப் டூ டயாபடிக். எனக்கு சர்க்கரை இல்லாமல் காபி/பால் அருந்துவது கடினமாக இருக்கிறது. அதற்கு பதில் சுகர்ஃப்ரீ நேச்சுரா பயன்படுத்தலாமா? ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா?

எனது சந்தேகத்திற்கு விடையளியுங்கள்