Wednesday, August 26, 2009

காலி ஜாடி மற்றும் இரண்டு கோப்பை காபி-யின் கதை

உங்களின் வாழ்க்கை 24 மணி நேரமும், நேரமின்மையால் ஒவ்வொரு செயலையும் கடினப்பட்டு சமாளிப்பதாக உணர்கிறீர்களா? 24 மணி நேரம் போதாது என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு "காலி ஜாடி மற்றும் இரண்டு கோப்பை காபி-யின் கதை" உதவும்.

ஒரு பேராசிரியர் தனது தத்துவவியல் வகுப்பறையில், சில பொருட்களை தனது மேசையில் வைத்திருந்தார். வகுப்பு தொடங்கியபோது ஒரு மிகப்பெரிய காலியான ஜாடியை எடுத்து அதில் கோல்ப் பந்துகளை போட்டு நிரப்பினார். பின் மாணவர்களை நோக்கி இந்த ஜாடி நிரம்பி உள்ளதா என்று கேட்டபோது மாணவர்கள் அதை ஆமோதித்தனர். பின் அதே ஜாடியில் சிறு சிறு கூழாங் கற்களைப் போட்டு இந்த ஜாடி நிரம்பி உள்ளதா என்று கேட்டபோது அப்போதும் மாணவர்கள் அதை ஆமோதித்தனர்.

பின் கொஞ்சம் மணலை எடுத்து அதே ஜாடியில் போட்டபோது இருக்கும் இடைவெளிகளில் அந்த மணல் போய் சேர்ந்தது. மீண்டும் ஒருமுறை மாணவர்களிடம் அதே கேள்வியை அதாவது ஜாடி நிரம்பி உள்ளதா என்று கேட்டபோது அவர்கள் ஆம் என்றே சொன்னர்.

பின் பேராசிரியர் அதே ஜாடியில் இரண்டு கோப்பை காபியை ஊற்றினார். மனல்களுக்கிடையில் அந்த காபி சென்று சேர்ந்து முழுமையாக அந்த ஜாடியை நிரப்பியது. மாணவர்கள் சிரித்தனர்.


சிரித்த மாணவர்களை நோக்கி "இது உங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது" என்றார் பேராசிரியர். ஜாடியில் போட்ட கோல்ப் பந்துகள் மிக முக்கியமானது - கடவுள், குடும்பம், குழந்தைகள், ஆரோக்கியம், நண்பர்கள், மிகவும் விரும்பும் பொருட்கள்... போன்றது. எல்லாவற்றையும் இழந்து, மேலே சொன்னவை மட்டுமே உங்களிம் இருந்தாலும் உங்கள் வாழ்க்கை முழுமையானதாக இருக்கும்.

கூழாங் கற்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள வேலை, வீடு மற்றும் கார் போன்றது. மணலானது உங்கள் வாழ்க்கையில் எஞ்சி உள்ள எல்லாவற்றையும் போன்றது - மிகச் சிறியது.

அந்த ஜாடியில் முதலாவதாக மணலைப் போட்டிருந்தால் கூழாங் கற்களையோ அல்லது கோல்ப் பந்துகளையோ ஜாடியில் போட்டிருக்க முடியாது. இதுவேதான் நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். எனவே எப்போதும் உங்கள் வாழ்க்கையில் மிகச் சிறிய விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தீர்கள் என்றால், பின் மிக முக்கியமான விசயங்களுக்கு உங்களால் நேரம் ஒதுக்க முடியாது. ஆகவே உங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதற்கான விசயங்களுக்கு நேரம் ஒதுக்கி முக்கியத்துவம் கொடுங்கள்.

உங்கள் குழந்தைகளிடம் விளையாடுங்கள்.
உடல் நலத்தை அவ்வப்போது செக்கப் செய்யுங்கள்.
உங்கள் துணையை டின்னருக்கு வெளியே அழைத்து செல்லுங்கள்.

எப்போதும் உங்கள் இல்லத்தை சுத்தம் செய்து, தேவை இல்லாத குப்பைகளை அகற்ற கண்டிப்பாக நேரம் இருக்கும்.

கோல்ப் பந்துகளை முதலில் நிரப்ப கவனமாக இருங்கள் - மிக முக்கியமானவற்றிற்கு நேரம் ஒதுக்குவது.

உங்களுடைய முதன்மையானவற்றை அட்டவணைப் படுத்துங்கள் - மிகச் சரியாக.

மற்றவை மணலைப் போன்றது.

அப்போது ஒரு மாணவர் எழுந்து அந்த காபி எதைக் குறிக்கிறது என்று கேட்டார். பேராசிரியர் புன்முறுவலுடன் "மிக்க மகிழ்ச்சி! இந்த கேள்வியை கேட்டதற்கு" என்றார்.

உங்கள் வாழ்க்கையில் எதெதற்கு எப்படி முக்கியத்துவம் கொடுப்பீர்களோ தெரியாது, ஆனால் எப்போதும் உங்கள் நண்பர்களுடன் அமர்ந்து ஒரு கோப்பை காபி அருந்த உங்களிடம் நேரம் கண்டிப்பாக இருக்கும், இதைதான் அது பிரதிபலிக்கிறது என்று சொல்லி அந்த வகுப்பை முடித்தார்.

9 comments:

ராஜா சந்திரசேகர் said...

தேவையான ஒரு கதை.நன்றி.

டவுசர் பாண்டி said...

யப்பா !! உண்மைக்கி ரொம்பவே , சூப்பர் கதை தலீவா !! இது மேரி கதை கேட்டு ரொம்ப வருஷம் ஆச்சி , கட்சீல சொல்றா மேரி , ஒரு கப்பு காப்பி , நாம்ப என்னிக்கி ஒண்ணா ஒக்காந்து குடிக்கப் போறோம் ? அத்த சொல்லு !! அக்காங் !!

Mohan said...

வா தலீவா! என்ட்ரி கொடுத்ததுக்கு டான்க்சுப்பா! கூடிய சீக்கிரம் ஒன்னா உக்காந்து காபி சாப்டுவோம்!! பட்டணம் வரும்போது உன்க்கு மெயில் போடறேன்.. அப்ப மீட் பண்ணுவோம்!!!

Ammu Madhu said...

ரொம்ப நல்லா மெசேஜ் உள்ள கதை..வாழ்த்துக்கள்..

அன்புடன்,
அம்மு.

Mohan said...

வாங்க ராஜா சந்திரசேகர்!
தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி!

வாங்க Ms. Ammu Madhu!
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!

வேலன். said...

நல்ல கருத்து நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Mohan said...

வேலன். said...
//நல்ல கருத்து நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
//
தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி நண்பரே!
வாழ்க வளமுடன்!!

Anonymous said...

வணக்கம் நண்பா,
தங்கள் வலைபக்கதிர்க்கு நீண்ட நாட்களாக வருகை புரிகிறேன். ஆனால் பாருங்கள் பின்னுட்டம் தான் இட இயலவில்லை. மிக நன்றாக எழுதுகிறீர்கள் நண்பா. அலுவலகத்தில் அதிகமான வேலை பளு அதன் காரணமாக தான் இவ்வளவு நாட்கள் கழித்து பின்னுட்டம்.
இனி தொடர்ந்து தொடர்பில் இருக்க முயல்கிறேன்.

அழியாத அன்புடன்
அடலேறு

Mohan said...

வாங்க adaleru!
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், தொடர் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றி!
நானும் உங்கள் தளத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன்! உங்கள் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
தொடர்ந்து வருகை தாருங்கள்!!