Wednesday, September 16, 2009

சுற்று சூழலை பாதுகாக்க சில வழிகள்

HP நிறுவனம் கூறும் வழிமுறைகளை கவனியுங்கள்:-
1) பிரிண்ட் எடுக்கும்போது மார்ஜின் அளவை குறைத்தால் மொத்த பக்கங்களின் அளவு மிகவும் குறையும், குறிப்பாக பெரிய டாக்குமெண்ட்களை பிரிண்ட் செய்யும்போது.

2) உங்களிடம் தேவைக்கு அதிகமாக உள்ள கணினிகளை தேவை உள்ளவர்களுக்கு கொடுத்து விடுங்கள்.

3) கணினி அய்டில் (Idle) மோடில் இருக்கும்போது, Stand by மோடில் இருப்பதைக் காட்டிலும் 20 முதல் 50 மடங்கு அதிக அளவு சக்தி செலவாகிறது. எனவே Control Panel Power Options மெனு மூலம் கணினியின் Stand by Option - ஐ அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.

4) நீண்ட நேரம் உங்களுக்கு கணினியில் வேலை இல்லாவிட்டால், Stand by அல்லது Sleep மோடில் வைக்கவும். Screen Saver வைத்திருந்தால் எடுத்து விடவும், இது அதிக சக்தியை வீணாக்குகிறது.


5) பிரிண்ட் கேட்ரிட்ஜ்ஸ் –களை மறு சுழற்ச்சிக்கு (Re Cycle) அதற்க்கென உள்ள நிறுவனங்களிடம் கொடுத்து விடுங்கள்.

6) உங்கள் பயணங்களின் போது தங்கும் அறைகளில் விளக்குகளின் பயன் நேரத்தை குறைத்து வெப்பத்தின் அளவு குறைய உதவுங்கள்.

7) உங்கள் குடும்பத்தினருடன் பேசி ஒரு விழிப்புனர்வை ஏற்படுத்துங்கள், இந்த பூமியை வெப்ப மயமாவதிலிருந்து தடுக்க. சிறு சிறு விசயங்கள், எடுத்துக்காட்டாக சமையலறையில் காகிதத்திற்க்கு பதிலாக துணிகளையும், காரை மழை நீரில் கழுவுவதும் இந்த பூமியைக் காக்கும்.

8) உங்கள் அன்றாட வாழ்வில் மறு சுழற்ச்சிக்கு உட்படும் கோப்பைகளையே காஃபீ-க்கு பயன்படுத்துங்கள். டிஸ்போஸெபல் (Disposable) கோப்பைகளின் பயன்பாட்டை பெருமளவு குறையுங்கள்.

9) வெப்ப அளவை குளிர் காலத்தில் ஒரு டிகிரி குறைத்தும், கோடை காலத்தில் ஒரு டிகிரி அதிகரித்தும் உங்கள் எலெக்ட்ரிஸிடீ பில்லில் 3% குறைத்துக் கொள்ளுங்கள்.

10) ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பேட்டரிகளை விட ரீசார்ஜபல் பேட்டரிகளை பயன்படுத்தி உங்கள் செலவை குறைப்பத்துடன், உங்கள் சுற்றுப்புறத்தையும் மின் கழிவுகளில் இருந்துக் காப்பாற்றுங்கள்.

11) பயன்படுத்தாதபோது தேவையற்ற விளக்குகளையும் மின் சாதனங்களையும் அணைத்து வையுங்கள்.

12) சாதாரண விளக்குகளுக்கு பதிலாக, மின்சாரத்தை சேமிக்கும் CFL போன்ற விளக்குகளை பயன்படுதுங்கள். இவை (CFL) சிறிது விலை அதிகமாக இருந்தாலும் மின்சாரத்தை பெருமளவு சேமிப்பத்துடன், நீண்ட காலமும் உழைக்கும்.

5 comments:

நிகழ்காலத்தில்... said...

அக்கறையான விழிப்புணர்வுமிக்க இடுகைக்கு நன்றி நண்பரே

JesusJoseph said...

நல்ல தகவல்.

முடிந்த அளவு முயற்சி செய்யவேன்

நன்றி,
ஜோசப்
http://www.sirippuulagam.com

Mohan said...

வாங்க நிகழ்காலத்தில்!
வாங்க JesusJoseph!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!

*இயற்கை ராஜி* said...

விழிப்புணர்வுமிக்க இடுகை

Mohan said...

வாங்க இய‌ற்கை!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!