அப்போது அந்த பேராசிரியர், தன் மாணவர்களுக்காக ஒரு பெரிய பாத்திரத்தில் காபி'யும், பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார்.
கண்ணாடி, பிளாஸ்டிக், பூக்கள் வேலைபாடு நிறைந்த, பீங்கான், விலை உயர்ந்த மற்றும் சாதாரண என பல வகை கோப்பைகளை வைத்து, காபி'யை தாங்களாகவே எடுத்துகொள்ளுமாறு கேட்டுகொண்டார்.
அனைவரின் கைகளிலும் காபி கோப்பை அவர்கள் அருந்த தயாராக இருந்தபோது பேராசிரியர் சொல்கிறார்...
"நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா? எல்லோருமே விலை உயர்ந்த, அழகான கோப்பைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு , சாதாரண கோப்பைகளை தவிர்த்து விட்டீர்கள். இது சாதாரணம் என்றாலும், என்ன தெரிகின்றது என்றால், எல்லோருமே சிறந்த ஒன்றை மட்டுமே எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள், இதுவே உங்கள் பிரச்சனை மற்றும் மன அழுத்தத்திற்கான காரணமாகும்".
உண்மையாக உங்களுக்கு எது வேண்டுமெனில் அந்த காபி'யே அல்லாது அந்த கோப்பைகள் அல்ல. ஆனால் நீங்கள் கோப்பைகளில்தான் அதிக கவனம் செலுத்தி, ஒவ்வொருவரும் மற்றவர்களின் கோப்பைகள் மீதும் உங்கள் கண்கள் செல்கிறது. இப்பொழுது, உங்கள் வாழ்க்கை காபி என்றால், உங்களின் வேலை, பணம், சமுதாயத்தில் உங்களின் நிலை இவைகள் கோப்பைகளாகும். அது உங்களின் வாழ்க்கைக்கு தேவையான ஒரு சாதாரண கருவியே அன்றி, அது உங்களின் வாழ்க்கையின் தரத்தை மாற்றிவிட முடியாது. பல சமயங்களில், கோப்பைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி, அதிலிருக்கும் காபியை சுவைக்க தவறி விடுகிறீர்கள்.
எனவே, அந்த கோப்பைகள் உங்களை ஆதிக்கம் செலுத்துவதை தவிருங்கள். மாறாக காபியை ரசித்து, சுவைத்து, மகிழுங்கள்.
7 comments:
insightful
அருமையான சிந்தனையைத் தூண்டி வழிகாட்டும் கதை.
நம்மில் பலர் கோப்பியையிலேயே வாழ்வைத் தொலைத்து விட்டோம்.
ஆனாலும் நான் மிக இளவயதில் சற்று விழிப்படைந்தேன்.
பசிக்கே உணவு; ஒதுங்க வீடு; மறைக்க ஆடை இது நான் கடைப்பிடிப்பதால்
அழுத்தம் குறைவு;
ஆனால் நம் சார்ந்த அடுத்தவரைத் திருப்திப்படுத்த வேண்டுமே!
நல்ல கதை...
உண்மைதான் நாம் எல்லாரும் பணம், அந்தஸ்து என்ற மாயையில்தான் இருக்கோம்.
வாங்க அப்பாதுரை!
வாங்க யோகன் பாரிஸ்(Johan-Paris)!
வாங்க சே.குமார்!
வாங்க DrPKandaswamyPhD !
(ஏன் உங்க கமெண்ட் பப்ளிஷ் ஆக மாட்டேன்குதுன்னு தெரியல)
தங்கள் அனைவரின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!!
அருமையான விளக்கம்.
நன்றி
அருமையான பதிவு நண்பரே...
வாங்க வலசு - வேலணை!
வாங்க பிரியமுடன் ரமேஷ்!
தங்கள் அனைவரின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
Post a Comment