Monday, September 20, 2010

பைக்'ல வேகமா போறவங்களா நீங்க? இது உங்களுக்குத்தான்....

பைக்'ல ஏறி உட்கார்ந்து விட்டால் பெரும்பாலோனோர் பறக்கவே விரும்புகிறார்கள். அர்ஜென்ட் அல்லது ஆர்டினரி என்றெல்லாம் இல்லை. சாதாரணமாகவே ஸ்பீடா போவதே வழக்கம். இதில் ஆண், பெண் என்ற பேதமில்லை. அதிலும் ஹெல்மெட் அணிவதையும் யாரும் விரும்புவதில்லை.

வேகமாக சென்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை இல்லாதபோது, நான் கொஞ்சம் நார்மல் ஸ்பீடில் செல்லுவது வழக்கம். என்னுடன் பணிபுரியும் நண்பர் எப்போதுமே மிக வேகமாகவே செல்வதே வழக்கம். அவருடன் பின்னால் உட்கார்ந்து செல்லும்போதே எனக்கு எப்போதும் ஒரு கிலியாகவே இருக்கும். அவ்வளவு வேகமாக செல்வார். நானும் சிலசமயங்களில் கொஞ்சம் மெதுவாக செல்லுமாறு சொல்வேன்.
 
திடிரென அவர் மெதுவாக செல்ல ஆரம்பித்து விட்டார். காரணம் அவர் வண்டியின் பின் டயர் மிகவும் தேய்ந்து போய் விட்டதால், மாற்றும் வரை மெதுவாக செல்வோம் என முடிவு செய்துவிட்டார். ஒரு நாள் பேச்சுவாக்கில், "சார்.. முன்பெல்லாம் என் வண்டி லிட்டருக்கு 45KM கொடுத்தது. இப்போது 65KM கொடுக்க ஆரம்பித்து விட்டது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனவே இனி எப்போதும் மெதுவாகவே செல்லலாம் என முடிவு செய்துவிட்டேன்" என்றார்.
நானும் பார்த்தேன். நல்ல ஐடியாவா இருக்கே...நாமும் டெஸ்ட் பண்ணிப் பார்ப்போம் என்று 30 to 45 க்குள் செல்ல ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம்?!? என் வண்டி 55KM கொடுத்துக்கொண்டிருந்தது இப்போது 70KM கொடுக்க ஆரம்பித்து விட்டது. நான் இப்போதெல்லாம் அந்த ஸ்பீடிலேயே செல்ல ஆரம்பித்துவிட்டேன்.


இதனால் என்ன நன்மை?...
1)  நீங்கள் வீட்டிலிருந்து, அலுவலகத்திற்கு செல்ல ஸ்பீடாக செல்வதற்கும், மெதுவாக செல்வதற்கும் ஒன்னும் பெரிய நேரத்தை நீங்கள் மிச்சபடுத்தி விட முடியாது. இரண்டிலிருந்து ஐந்து நிமிடம்தான் நீங்கள் சேமிக்க முடியும். ஆனால் அதைவிட உங்கள்  உயிர் முக்கியமில்லையா

2) நீங்கள் மெதுவாக செல்லும்போது வண்டி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். குறுக்கே யார் வந்தாலும் விபத்தை பெரும்பாலும் தவிர்த்து விட முடியும்.

3) பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து வரும் இந்நாட்களில்மெதுவாக செல்வதன் மூலம்  ஒரு மாதத்தில் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.  உங்கள் வீட்டிற்கும் நல்லது. நாட்டிற்கும் நல்லது. சுற்றுப்புற சூழ்நிலைக்கும் நல்லது.

4) ஹெல்மெட் அணியாமல் சென்றாலும், மெதுவாக செல்வதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யலாம். (ஹெல்மெட் அணிவது அவசியம்  என்பதில் மாற்றுக் கருத்தில்லை.)

5) விரைவாக சென்று சேர்வது முக்கியம் என்றாலும்,   சென்று சேர வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக செல்வது
அதைவிட அவசியமில்லையா?

இப்படி பல நன்மைகள் இருக்கும் போது ஏன் நாம் வேகமாக பயணம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டம்தான். வேகமாக வண்டி ஓட்டிப் பழகியவர்களுக்கு மெதுவாக செல்ல ஒரு மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் மனதை கண்ட்ரோல் செய்து மெதுவாக செல்ல ஆரம்பித்தால், பின் அதுவே பழக்கத்திற்கு வந்து விடும்.

இது ஒன்னும் அறிவுரை இல்லைங்க... என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். சரி என படுபவர்கள் பின்பற்றி பார்த்து பயனடையுங்கள்.

வாழ்க வளமுடன்!

11 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

பின் பற்ற வேண்டிய தகவல்தான்.

KaRa said...

I couldn't get mileage on my bike, Will Try this.
Thanks for the info.

இளங்கோ said...

Good one. Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

yes. i will follow

நிகழ்காலத்தில்... said...

//இது ஒன்னும் அறிவுரை இல்லைங்க... என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். சரி என படுபவர்கள் பின்பற்றி பார்த்து பயனடையுங்கள். //

ஆமாம் அதிக கிலோமீட்டர் கிடைக்கும் வழி சொல்லி இருக்கிறீர்கள்.

கண்டிப்பாக பலரும் பின்பற்றுவார்கள்!

Kannan R said...

இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே. சரி ராயல்டி எங்க?

Mohan said...

வாங்க சைவகொத்துப்பரோட்டா!
வாங்க KaRa!
வாங்க இளங்கோ!
வாங்க ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)!
வாங்க நிகழ்காலத்தில்!

இதை பின்பற்றுவதாக கூறிய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!

Mohan said...

// Kannan R said...

இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே. சரி ராயல்டி எங்க?
//

இத்தனை பேர் இதைபார்த்து பயனடையபோவதே உங்களுக்கான விலை மதிப்பில்லாத ராயல்டி!

ivingobi said...

wow.... very useful post.....

நா.மணிவண்ணன் said...

இந்த தகவல் அனைத்தும் எனக்கு அவசியாமானதுங்க .நன்றிங்க

Mohan said...

வாங்க ivingobi!
வாங்க நா.மணிவண்ணன்!
உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!