Wednesday, October 20, 2010

மோகனச்சாரலின் காபி ஷாப் - 20-10-2010


ஒரு வழியாக காமன் வெல்த் கேம்ஸ் வெற்றிகரமாக முடிவடைந்து இந்தியாவும் முன் எப்போதும் இல்லாத அளவு  பதக்கங்களை குவித்துள்ளது. ஆனால் அதை நினைத்து பெருமிதமோ, மகிழ்ச்சியோ கொள்ளாத அளவுக்கு ஊழல் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு  நல்ல நிகழ்வை இந்த ஊழல் நிகழ்வுகள் நாசம் செய்து விட்டதை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது.
*************************************************************
இன்று ஒரு ஸ்பெசல் தேதிங்க!
 அதாவது 20-10-2010 
தேதி, மாதம் இரண்டையும் இணைத்தால் இந்த வருடம் வந்து விடும்.  உடனே இதைபோல் பல உதாரணம் சொல்லலாம் என சொல்லாதீர்கள்.  இன்றைய   தேதியின் சிறப்பை சொன்னேன். அவ்வளவுதான்!
*************************************************************
தற்போது தனியார் கல்லூரிகளில் B.Ed கோர்சை கூவி கூவி விற்றுக்கொண்டு இருக்கிறார்களாம். அதாவது ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் செலுத்தி விட்டால் நீங்கள் கல்லூரியே செல்ல வேண்டாம். ஏன் ரெகார்ட் வொர்க்கையும் அவர்களே செய்து கொடுத்து விடுவார்களாம். தேர்வுக்கு மட்டும் நீங்கள் சென்றால் போதுமாம்.  இவர்கள்தான் நாளைக்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தப் போகிறவர்கள்! நாடு போகும் போக்கை நினைத்தால்...
என்ன சொல்வது?..............
*************************************************************
நீங்கள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொது உங்கள் வீட்டின் சாவியை நம்பிக்கையான பக்கத்து வீட்டில் கொடுத்து செல்வது உத்தமம். இது பல வழிகளில் உதவியாகவும், பல சிரமங்களை தவிர்க்கவும் உதவும். உதாரணமாக  உங்கள் வீட்டின் தண்ணீர் குழாயை நீங்கள் மறதியாக திறந்துவிட்டே சென்று இருக்கலாம். பக்கத்து வீட்டுக்காரர் போன் செய்து உங்களால் நாங்களும் பாதிக்கபடுகிறோம் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? ஒன்று நீங்கள் உங்கள் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு திரும்ப வேண்டும். அல்லது உங்கள் வீட்டின் பூட்டை உடைக்க சம்மதிக்க வேண்டும். இப்படி பல.... காஸ் லீக் ஆகலாம்.. ஆதலால் பல சிரமங்களை தவிர்க்க உங்கள் வீட்டின் சாவியை நம்பிக்கையான பக்கத்து வீட்டில் கொடுத்து செல்வது உத்தமம்.
*************************************************************

நகைச்சுவைப் பக்கம்.....
திருட்டை கண்டு பிடிக்கும் ஒரு மெசினை அமெரிக்காவில் கண்டுபிடித்தார்களாம். அது அமெரிக்காவில் ஒரு மணி நேரத்தில் 100 திருடர்களை கண்டுபிடித்ததாம். இங்கிலாந்தில் ஒரு மணி நேரத்தில் 50 திருடர்களை கண்டுபிடித்ததாம்.
சிங்கப்பூரில் 25 திருடர்களை கண்டுபிடித்ததாம்.
நமது இந்தியாவில்?
?
?
?
?
?
15 நிமிடத்தில் அந்த மெசினையே திருடி விட்டார்களாம்.
ங்கொய்யால!....... யாருட்ட?!?.............

ஒரு சினிமா  ஹீரோ:- நான் ஒரு படம் நடிக்கணும்! காசே செலவு பண்ணகூடாது... நிறைய தியேட்டர்ல ஓடனும்... ஒரு வருஷம் ஓடனும்...A, B, C சென்டர்ல என எல்லா இடத்திலும் ஓடனும்!  ஏதாவது ஐடியா?
சந்தானம்:- அதுக்கு நீ ரோட்லதான் ஓடனும்.....

வாழ்க வளமுடன்!

1 comment:

பத்மா said...

nice .
நல்லா இருக்கு .தொடர்ந்து எழுதுங்க