Friday, February 20, 2009

அரசியல்வாதிகள் மக்களிடம் கேட்க விரும்பும் 10 கேள்விகள்!

1) ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது வேண்டாம் என்று ஏன் சொல்வதில்லை? அதுவும் எல்லா கட்சிகாரர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு அல்வா கொடுக்கும் உங்களுக்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதே அல்வாவை திருப்பி கொடுப்பது தவறா?

2) ஓட்டுக்கு பணம் வாங்கும்போதே தெரியவில்லையா உங்களுக்கு, நாங்களும் ஜெயித்த பிறகு அந்த பணத்தை உங்களிடமிருந்தே பல மடங்காக கறந்து விடுவோம் என்று?

3) ஓட்டுக்கு பணம் வாங்கிய நீங்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பணமே இல்லாமல் ஒரு காரியத்தை முடித்துக் கொடுப்போம் என்று எதிர்பார்கிறீர்கள்?

4) ஓட்டுக்கு லஞ்சம் வாங்கிய நீங்கள் எங்கள் ஆட்சியை லஞ்சம் நிறைந்த ஊழல் ஆட்சி என்று எப்படி சொல்கிறீர்கள்?

5) நாங்கள் எந்த தவறு செய்தாலும் சில மாதங்களிலேயே எப்படி உங்களால் மறந்து விட முடிகிறது?

6) ஒரு முறை எங்களை தோற்கடித்துவிட்டு அடுத்த முறை எங்களை ஜெயிக்க வைத்து விடுகிறீர்களே, நாங்கள் திருந்தி விட்டோம் என்று எப்படி ஒரு முடிவுக்கு நீங்களாகவே வருகிறீர்கள்?

7) நாங்கள் தேர்தலில் கொடுக்கும் வாக்குறுதிகளை எல்லாம் மற்றும் நாங்கள் மேடையில் பேசுவதை எல்லாம் எப்படி உங்களால் நம்ப முடிகிறது?

8) ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறிக்கொள்ளும் எங்களுக்கு எப்படி வோட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கிறீர்கள்?

9) உங்கள் ஜாதி வேட்பாளருக்கு எப்படி கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுப் போடுகிறீர்கள்? அவரும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான் என்று ஏன் தெரிவதில்லை?

10) இன்னும் எத்தனை வருடங்கள் இப்படி ஏமாந்த இழிச்சவாயர்களாய் இருப்பதாய் உத்தேசம்?

இன்னும் எவ்வளவோ கேள்விகள் இருக்கிறது! இருந்தாலும் இப்போது 10 கேள்விகள் கேட்பதுதான் பேஷனாக இருப்பதால் இத்தோடு முடித்துக் கொள்கிறோம்!

4 comments:

ஷங்கர் Shankar said...

மோகன் இந்த பதிவை இத்துடன் இணைத்துள்ளேன்

தமிழ் பதிவர்களின் செல்லச்சண்டை கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

Mouthayen Mathivoli said...

Nalla chonneenga! Aanaalum nam makkalukku uraikkaadhu

Mouthayen Mathivoli
Singapore

Mohan said...

//ஷங்கர் Shankar said...
மோகன் இந்த பதிவை இத்துடன் இணைத்துள்ளேன்
தமிழ் பதிவர்களின் செல்லச்சண்டை கேட்க விரும்பும் பத்து கேள்விகள்
//
வாங்க ஷங்கர் Shankar தங்கள் வருகைக்கும் இணைப்புக்கும் நன்றி!

Mohan said...

//Mouthayen said...
Nalla chonneenga! Aanaalum nam makkalukku uraikkaadhu

Mouthayen Mathivoli
Singapore
//
வாங்க Mouthayen தங்கள் வருகைக்கு நன்றி!
இது ஆதங்கத்தின் வெளிப்பாடே!