Tuesday, March 17, 2009

நகைச்சுவை தொகுப்பு - 1

டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
எந்த பாட்டுக்கு?

ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
நோயோடதான்!

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?


தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு!
கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!

காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது!
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?

குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
தெரியல!
குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

டாக்டர்! இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல!
என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

டாக்டர்! நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரை எங்கேயும் கிடைக்கல!
மன்னிக்கணும்! அது என்னோட கையெழுத்து! மாத்திரை எழுத மறந்து விட்டேன்!

டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
என்னிடம் சுத்தமா இல்ல!
பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

அப்பா: எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?
மகன்: ஒன்னே ஒண்ணுதான்!
அப்பா: ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?
மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!

சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

என்னுடைய அம்மா ஒரு கார்டை வைத்தே நடக்கப் போவதை சொல்லி விடுவார்கள்!
எப்படி?
ஆம்! என்னுடைய ரேங்க் கார்டைப் பார்த்தே, என் அப்பா வந்து என்னை என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லி விடுவார்!

மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?


பாபு: என் மனைவி என்னை லச்சாதிபதி ஆக்கி விட்டாள்!
கோபு: ம்ம். நீ கொடுத்து வைத்தவன்!
பாபு: போடா! நான் கல்யாணத்திற்கு முன் கோடீஸ்வரனாக இருந்தேன்!

கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?
கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்!

11 comments:

டவுசர் பாண்டி said...

//கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்//
இன்னாபா சொம்மா உஸ்தாது
கணக்கா நம்ப மினிமா கிட்ட
வர்றே !

Mohan said...

//டவுசர் பாண்டி said...
//கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்//
இன்னாபா சொம்மா உஸ்தாது
கணக்கா நம்ப மினிமா கிட்ட
வர்றே !
//

வாங்க டவுசர் பாண்டி
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

மனுநீதி said...

//காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது!
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?//

ithu top mohan and also the blue chudithaar one..

நாஞ்சில் பிரதாப் said...

//டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
எந்த பாட்டுக்கு?
என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?
இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?
கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்! //

இவையெல்லாம் புதுசு...நல்லாருந்துச்சு... இனியும் எழுதுங்க

Anbu said...

அனைத்தும் அருமையாக இருந்தது அண்ணா..

Unknown said...

kalakkal....

சின்னப் பையன் said...

:-))))))))))))))

Mohan said...

வாங்க உள்ளத்தில் இருந்து!,
வாங்க நாஞ்சில் பிரதாப்,
வாங்க Anbu,
வாங்க krs,
வாங்க ச்சின்னப் பையன்,
வணக்கம்!
உங்கள் அனைவருக்கும் நன்றி! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!

vijayakumaar said...

All Super ====Vijayakumaar.S

Unknown said...

super

Mohan said...

வாங்க vijayakumaar,
வாங்க C$H$A$R$ ,
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!