Friday, March 20, 2009

புவி வெப்பமயதாதலை தடுக்க ஒன்று சேருங்கள் 2009 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று!

புவி வெப்பமயதாதலை தடுக்க முதன் முதலில் சிட்னியில் 2007 ஆம் ஆண்டு எர்த் ஹவர் என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்வாக 2.2 மில்லியன் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் ஒரு மணி நேரத்திற்கு அனைத்து விளக்குகளும் நிறுத்தப்பட்டது.

பின் இந்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் மெல்ல மெல்லப் பரவி 2008 ஆம் ஆண்டு 50 மில்லியன் மக்கள் ஒரு மணி நேரத்திற்கு அனைத்து விளக்குகளையும் நிறுத்தி தங்கள் ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள்.

முதன் முதலாக 2009 ஆம் ஆண்டு இந்தியா இதில் இணைய உள்ளது. டெல்லி, மும்பை உள்பட 825 நகரங்கள் உள்ளிட்ட 80 நாடுகளில் வரும் சனிக் கிழமை அதாவது 2009 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை அனைத்து விளக்குகளையும் அணைத்து தங்கள் ஒத்துழைப்பை நல்க இருக்கிறார்கள்.

எனவே அன்பர்களே நீங்களும் அந்த நேரத்தில் உங்கள் வீடு மன்றும் வணிக நிறுவனங்களில் அனைத்து விளக்குகளையும் அணைத்து தங்கள் ஒத்துழைப்பை கொடுங்கள். இந்த செய்தியை உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நபர்களுக்குத் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மேலும் இது சம்பந்தமான தகவல்களுக்கு கீழ் உள்ள தளத்தில் சென்று அறிந்து கொள்ளுங்கள்.

http://www.earthhour.in/about-us.aspx

முடிந்த அளவு CFL எனப்படும் விளக்குகளையே உபயோகப் படுத்துங்கள்.
நம் வருங்கால சந்ததியினருக்கு இந்த உலகில் நிம்மதியாக வாழ வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள். இது நம் அனைவரின் இன்றியமையாத கடமை என்பதை உணருங்கள்!

9 comments:

டவுசர் பாண்டி said...

அண்த்தே ! வண்டேன் , இரு மேட்டரு இன்னானு கண்டுகீனு வர்றேன் .

டவுசர் பாண்டி said...

தலீவரே ! நம்ப ஊரு நெலம தான்
உன்னுக்கு தேரீமே பா ,

நீ சொன்ன டைமுக்கு கரெண்ட்டு
கீதான்னு, மின்ன பாரு ,
அப்பால அத்த ஆபு பண்றதா
வாணாமான்னு ரோசன பண்ணலாம் .

Mohan said...

வாங்க டவுசர் பாண்டி! நீங்க சொல்றது வாஸ்தவம்தான்! இருந்தாலும் அந்த நேரத்தில் கரண்ட் இருந்தால் நீங்களே நிறுத்தி வைத்துவிடுங்கள்! அது போதும். எதோ நம்மால் முடிந்தது!

டவுசர் பாண்டி said...

ஐயே ! நம்பல பொய் நீங்க , வாங்கோ ! இண்ட்டு
சொம்மா டேய் , டவ்சறு உன் ஏரியால கீற
வெளக்கு அல்லாத்தையும் நிர்த்தி வை
இன்னு கண்டிசனா சொல்லுப்பா ! அப்ப
தா இந்த டவ்சறு கேப்பான்,

Mohan said...

//ஐயே ! நம்பல பொய் நீங்க , வாங்கோ ! இண்ட்டு
சொம்மா டேய் , டவ்சறு உன் ஏரியால கீற
வெளக்கு அல்லாத்தையும் நிர்த்தி வை
இன்னு கண்டிசனா சொல்லுப்பா ! அப்ப
தா இந்த டவ்சறு கேப்பான்,//

சரிப்பா! நிறுத்திருப்பா! மொத்தத்தில வெளக்க நிறுத்தி வச்சா சந்தோசம்தான்!

கிரி said...

இதை பயன்படுத்தி எவனும் எதையும் உஷார் பண்ணாம நாம் உஷாரா இருந்துக்கனும் :-)

நல்ல பதிவு

Mohan said...

//கிரி said...
இதை பயன்படுத்தி எவனும் எதையும் உஷார் பண்ணாம நாம் உஷாரா இருந்துக்கனும் :-)

நல்ல பதிவு
//
வாங்க கிரி! நீங்கள் சொல்றதும் சரிதான்! உஷாரா இருந்து ஒரு மணி நேரத்துக்கு
கொஞ்சம் விளக்கை நிறுத்தி வைத்து விடுங்கள்! நன்றி!

தேவன் மாயம் said...

முதன் முதலாக 2009 ஆம் ஆண்டு இந்தியா இதில் இணைய உள்ளது. டெல்லி, மும்பை உள்பட 825 நகரங்கள் உள்ளிட்ட 80 நாடுகளில் வரும் சனிக் கிழமை அதாவது 2009 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை அனைத்து விளக்குகளையும் அணைத்து தங்கள் ஒத்துழைப்பை நல்க இருக்கிறார்கள்.
///
நல்ல தகவல்!!!

Mohan said...

வாங்க thevanmayam , தங்கள் வருகைக்கு நன்றி!