Thursday, August 20, 2009

கணினியில் எல்லா சாப்ட்வேர்களையும் அப்டேட்டில் வைத்திருக்க

நமது கணினியில் பலவிதமான சாப்ட்வேர்களை பதிவு செய்து வைத்திருப்போம். அடிக்கடி புதிது புதிதாக நமக்கு பிடித்த சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்வோம். சில சாப்ட்வேர்கள் தானாகவே அப்டேட் செய்துகொள்ளும். சிலவற்றை நாமாக அப்டேட் செய்து கொள்ளவேண்டும்.

நமது கணினியில் உள்ள அனைத்து சாப்ட்வேர்களுக்கும் அப்டேட் செய்ய நமக்கு ஒரு ஆலோசகர் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்தானே? நமக்கு இருக்கும் வேலைப் பளுவில் ஒவ்வொரு சாப்ட்வேர்யும் சரிபார்த்துக் கொண்டிருப்பது சாத்தியம் இல்லைதானே?

அதற்காகவே ஒரு இலவச டூல் இருக்கிறது. அதன் பெயர் செக்குனியா(Secunia). இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து வைத்து விட்டால், ஒரு சாப்ட்வேர் அப்டேட் செய்யும் நிலை வரும்போது உங்களை எச்சரிக்கை செய்து, அதற்குரிய முகவரியையும் கொடுக்கும்.

நீங்கள் இந்த டூலை இன்ஸ்டால் செய்த பிறகு உங்கள் டாஸ்க் பாரில் கீழே படத்தில் அம்பு குறியிடப்பட்டு காட்டியபடி ஒரு ஐகான் வரும். அதை க்ளிக் செய்தால் உங்கள் கணினியில் உள்ள அனைத்து சாப்ட்வேர்-களும் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா என அறிந்து கொள்ளலாம்.



உங்கள் கணினியில் உள்ள அனைத்து சாப்ட்வேர்களும் சரியாக அப்டேட் செய்யப் பட்டிருந்தால் 100 % என்றும் பச்சை நிற பாரும்(Green Bar) தெரியும் . ஒரு வேளை ஏதாவது சாப்ட்வேர் அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் மஞ்சள் நிறமும் அதற்குரிய சதவீதமும் (96, 98, 90...) காட்டும். மிகவும் மோசமாக இருந்தால் சிவப்பு நிறத்தில் உங்களை எச்சரிக்கும்.




இன்னும் ஏன் தாமதம்? இந்த http://secunia.com/vulnerability_scanning/personal/ தளத்திளுருந்து தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொண்டு, உங்கள் கணினியில் உள்ள அனைத்து சாப்ட்வேர்களையும் அப்டேட்டில் வைத்திருங்கள்!!!

6 comments:

டவுசர் பாண்டி said...

மோகனு அண்ணாத்தே !! வண்டேம்பா !! சொம்மா, அதிரி , புதிரியா கீதே !! நல்ல மேட்டரு தலீவா !! இது மேரி மேட்டருக்கு ஒட்டு போடாம இருக்க முடியாது , குத்திட்டேன் , சூப்பர் !!

Mohan said...

வா டவுசர் அண்ணாத்தே !! இப்பத்தான் மன்சுக்கு குஜாலாக் கீது! அப்பப்ப வந்ட்டு போப்பா நம்ம பக்கமும்! அக்காங்!!!

வேலன். said...

மோகன் அண்ணாத்தே ...
வணக்கம்.உங்கள் கூட்டாளியா என்னையும் சேர்த்துக்குங்க...

ஓட்டு போட்டுட்டேன்...வரட்டா..

வாழ்க வளமுடன்,
வேலன்.

Mohan said...

வாங்க வேலன் சார்... நான் உங்களை கூட்டாளியா சேர்துகுறதா? நீங்க என்னை கூட்டாளியா சேர்த்துகிட்டதுக்கு மிகவும் மகிழ்ச்சி! நெஞ்சார்ந்த நன்றி!

அப்புறம் வருகைக்கும், ஒட்டு அளித்தமைக்கும் ரொம்ப சந்தோசம், நன்றி!!

Jaleela Kamal said...

நாம் download செய்தது எந்த file லில் save ஆகியது என்று எப்படி கண்டு பிடிப்பது.
சில நேரம் ஏதாவது ஒரு இடத்தில் சேவ் ஆகிடும்.

Mohan said...

// Jaleela said...
நாம் download செய்தது எந்த file லில் save ஆகியது என்று எப்படி கண்டு பிடிப்பது.
சில நேரம் ஏதாவது ஒரு இடத்தில் சேவ் ஆகிடும்.

//

நீங்கள் இது மாதிரி டவுன்லோட் செய்யும்போது கணினி எந்த இடத்தில் சேவ் செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்டிருக்குமே? அதை நீங்கள் கவனிக்க தவறி இருந்தால் search option சென்று file name கொடுத்து (உதாரணமாக மேலே உள்ள file name PSISetup.exe) தேடவும்.. கண்டுபிடித்து விடலாம்..

இந்த மாதிரி confusion வராமலிருக்க எப்போது டவுன்லோட் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே உதாரணமாக D Drive -ல் Download என்று போல்டெர் உருவாக்கி அந்த இடத்திலேயே அனைத்து file களையும் டவுன்லோட் செய்யுங்கள். பின் எந்த confusion- ம் வராது. இந்த Download folder-ஐ Operating System இல்லாத Drive-ல் உருவாக்கி கொள்ளுங்கள்...

நீங்கள் டவுன்லோட் செய்யும் file விரைவாக டவுன்லோட் ஆக கீழ்கண்டவற்றில் ஏதாவது ஒன்றை இன்ஸ்டால் செய்துகொண்டு அதற்க்கு default download folder ஆக நீங்கள் உருவாக்கிய Download folder-ஐ கொடுத்து விடலாம்.

Flashget (http://www.flashget.com)
Download accelerator (http://www.speedbit.com/)

இதன் மூலம் டவுன்லோட் செய்தால் எவ்வளவு பெரிய file-களையும் விரைவாக டவுன்லோட் செய்துவிடலாம்.